நீங்கள் கேள்விப்படாத, இந்தியாவைப் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகள்

0
435

உலகத்தில் கணக்கிலடங்கா, ஆச்சரியங்கள் புதைந்துள்ள இடங்கள் ஏராளம். அதுவும் நமது இந்தியாவிலேயே நீங்கள் கேள்விப்படாத மர்மங்கள் நிறைந்த இடங்கள் அதிகம் இருக்கின்றது.

நீங்கள் பொதுவாக பயணங்களில் விருப்பமிருந்தால், இந்த இடங்களை எல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க. புதுப்புது விஷயங்களை நீங்களறிந்து கொள்ளவும் ஒரு வித்யாசமான பயணங்களை அனுபவிக்கவும் இந்த இடங்கலெல்லாம் உத்திரவாதம். வாங்க ஒரு ரவுண்ட் போகலாம்.

காற்றில் மிதக்கும் கல் :

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில், ஷிவாபூர் என்ற இடத்தில் இந்த காற்றில் மிதக்கும் கல் இருக்கிறது. 11 பேர் சேர்ந்து அந்த கல்லை தங்கள் விரல்களால் தொட்டு “கம்மார் அலி தர்வேஷ்” என்று சொன்னால் காற்றில் மிதக்க ஆரம்பித்துவிடுமாம்.

200 கிலோ கொண்ட இந்தக் கல் எப்படி காற்றில் மிதக்கிறது என் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. கம்மார் அலி என்ற ஞானியின் சக்தியால்தான் இந்த கல் மிதக்கிறது என்ற கதை நிலவுகிறது.

பறவைகளின் தற்கொலை பூமி :

அஸ்ஸாம் மாநிலத்தில் ஜதிங்கா எனும் கிராமத்தில் பறவைகளின் தற்கொலை செய்து கொள்கிறதாம். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்துகொள்கின்றன. அந்த சமயத்தில் வானிலிய மாற்றத்தால் உண்டாகும் காந்த அலைகள் பறவைகளை தற்கொலை செய்யத் தூண்டுகிறது.

ஆறு மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் :

ராஜஸ்தான் மா நிலத்தில் உள்ள கிரடு என்ற கோவிலில் மாலையானால் எந்த பக்தரும் தங்குவதில்லை. காரணம், அந்த கோவிலில் மாலைக்கு மேல் யார் தங்கினாலும் கல்லாகிவிடுவார்களாம். இதனால் அந்த கோவிலுக்கு யார் சென்றாலும், அவசரஅவசரமாக வெளியே வந்துவிடுவார்களாம்.

தஞ்சை பெரிய கோவில் :

இந்தையாவில் ஆச்சரியங்கள் மிக நிறைந்த கோவிலும் நம் தஞ்சை பெரிய கோவிலும் உண்டு. கோவில் கட்டுமானத்தில், செங்கல், மரம் என எதுவுமில்லாமல், முழுவதும் நீலம், சிவப்பு நிறைந்த கிரானைட் கற்களிலில் கட்டிய கோவில் அது. அந்த காலத்தில், எந்த வித கருவிகளுமில்லாமல் மெத்த படித்த இஞ்சினியர் இல்லாமல், இத்தனை கலையுணர்வோடு எப்படி கட்டியுள்ளார்கள் என உலகளவில் எல்லா நிபுணர்களும் ஆச்சரியபடும்படி அமைந்துள்ளது நமது தஞ்சை பெரிய கோவில்.

சிதம்பர ரகசியம்

சிதம்பர தில்ல நடராஜர் கோவில் மிகுந்த கலையம்ச நோக்கோடு கட்டப்பட்டதாக இருந்தாலும் அதனைப் பற்றி பல்வேறு கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. சிதம்பர ரகசியங்கள் என காலங்காலமாக அதனைப் பற்றி நாம் சொன்னாலும் என்ன ரகசியங்கள் என நமக்கு தெரிவதில்லை. இந்த கோவில் உலகின் பூமத்திய ரேகையின் மையைப் பகுதியில் அமைந்துள்ளது. தில்லை நடராஜரின் ஆனந்த தாண்டவம், காஸ்மிக் நடனம் என்று வெளிநாட்டு அறிஞர்களால் விவரித்துள்ளனர்.

கதவேயில்லாத வீடுகள் :

ஷீரடி அருகிலிருக்கும் ஷனி ஷிங்க்னாபூர் என்ற கிராமத்தில் எந்த வீடுகளுக்கும் கதவுகளே இல்லை. அப்படி யாராவது திருடினால் அவர்களின் பார்வை போய்விடும் என நம்பப்படுகிறது. அங்கிருக்கும் சனிபகவானின் காக்கும் தன்மையால்தான் இது சாத்தியப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here