முருங்கை காய், கீரை, பட்டை, பிசின் பற்றி விளக்கமான உண்மைகள்!

0
4654

மனித உடலின் வளமான இயக்கவியலுக்கு கிடைத்த அரும்பெரும் வரப்பிரசாதம் முருங்கை. அதன் பூ, இல்லை, காய், விதை, பட்டை, பிசின் என ஒவ்வொரு அங்கமும் நோய்களை குணப்படுத்த வல்லது.

முருங்கை ஈர்க்கு, கருவேப்பிலை ஈர்க்கு இவை இரண்டையும் சம அளவாக சேர்த்து 10 கிராம் ½ லிட்டர் நீரில் போட்டு ¼ லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி இரவில் குடிக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும். முருங்கை கீரையை கடைந்தோ, துவட்டியோ, சாம்பார் செய்தோ உணவாகக் கொள்ள வேண்டும். அல்லது முருங்கை இலையை நெய்யில் வறுத்து உணவுக்கு முன்னர் சாப்பிட வேண்டும். தொடர்ந்து செய்ய கண் பார்வை தெளிவடையும். முருங்கை இலையும், மிளகையும் சம எடையாக சேர்த்து நசுக்கி சாறு எடுத்து வலியுள்ள இடத்தில் பற்றாகப் போட தலை வலி குணமாகும்.

 

முருங்கை பிசினைக் காய வைத்து தூள் செய்து ½ தேக்கரண்டி அளவு காலை மாலை வேளைகளில் காய்ச்சிய பசும் பாலுடன் கலந்து குடித்து வர உடல் நலம் பெறும். மாலைக் கண் தீர, இரத்தம் விருத்தியாக முருங்கை கீரையை துவட்டியோ, கூட்டு கீரையாக கடைந்தோ சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் முக்கியமாக மாலைக் கண் நோய் வராமல் தடுக்கலாம். இரும்புச் சத்து மற்றும். வைட்டமின் -ஏ, கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் மிகுதியாக உள்ளது. முருங்கை பூவைப் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட உடல் பலம் பெறும். முருங்கை காயை எந்த வகையிலாவது சமைத்து தொடர்ந்து சாப்பிட சளி குறையும்.

 

முருங்கைக் கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய், கபம், மந்தம் தீரும். கீரையில் சுவையான கீரையும் சத்தான கீரையும் இதுதான். கீரையை  ஆமணக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வாத மூட்டு வலி, இடுப்பு வலி, உஷ்ணத்தால் வரும் வயிற்று வலி நீங்கும். முருங்கை இலை, தூதுவளை, பசலை அரைக்கீரை ஒன்று சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கி சாப்பிட்டு வர தாது பலப்படும். ஆண்மைக் குறைவு தீரும். எலுமிச்சம்பழச்சாறு சாப்பிடுதல் கூடாது. விந்தை நீர்த்துப்போக வைக்கும். அடுத்த

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here