முகேஷ் அம்பானியின் மாபெரும் திட்டம்.. ஈகாமர்ஸ் நிறுவனங்கள் அதிர்ச்சி..!

0
1721

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களின் ஒருவரான முகேஷ் அம்பானி ஜியோ நிறுவனத்தின் மூலம் பல கோடி இந்திய மக்களுடன் நேரடியாக வர்த்தகம் செய்யத் திட்டமிட்டு வருகிறார். பெட்ரோலியம் மற்றும் டெக்ஸ்டைல் பொருட்களைத் தயாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது புதிய ரூட்டில் செல்கிறது.

Reliance Jio GigaFiber price details: August 15 launch - SparkTV Tamil வெறும் ரூ.500க்கு 100GB அதிகவேக இண்டர்நெட்.. ஜியோ அதிரடி அறிவிப்பு..!

ஜியோ அறிமுகம் செய்த பின்பு முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமானிய மக்களிடம் நேரடியாக வர்த்தகம் செய்யும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதற்கு முக்கியக் கருவி ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் தான். இந்த இரண்டு நிறுவனங்களையும் பயன்படுத்தித் தற்போது நாட்டு முழுவதும் நேரடி சில்லறை வர்த்தகத்தில் ஈடுப்பட உள்ளது.

முகேஷ் ஆம்பானியின் புதிய திட்டத்தின் படி 5000 நகரங்களில் இருக்கும் 5100 ஜியோ பாயின்ட் ஸ்டோர்ஸ் மூலம் வாடிக்கையாளர்களை நேரடியாக அடையத் திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் அடைய மக்களை நேரடியாக அடைய திட்டமிடம் அதேசமயம் ஆப்லைன் மூலமாக மக்களை அடைய ஜியோ பாயின்ட் ஸ்டோர்ஸ்-ஐ பயன்படுத்த உள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல் தற்போது சர்க்கரை, பருப்பு, சோப், பிஸ்கட் முதல் ஆடை, செருப்பு என அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்வதன் மூலம் தற்போது இருக்கும் ஜியோ விநியோக அமைப்பின் மூலம் நாடு முழுவதும் பொருட்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

ஜியோ பாயின்ட் ஸ்டோர்களில் மக்கள் பொருட்களை ஆர்டர் செய்யவும், ஆர்டர்களைச் செய்த பொருட்களைக் கொண்டு பெற்றுக்கொள்ளவும் முடியும். மேலும் முக்கியமான நகரங்களில் ஜியோ ஊழியர்களே வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குப் பொருட்களை டெலிவரி செய்யும் முடிவிலும் ஜியோ ரீடைல் உள்ளது.

இந்தத் திட்டம் வெற்றிபெற்றால் நாட்டின் மிகப்பெரிய ஆப்லைன் வர்த்தகச் சந்தையை ஜியோ உருவாக்கியிருக்கும். இது அமேசான், பிளிப்கார்ட், வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here