ஒருவழியாக வாயை திறந்தார் தோனி.. ரசிகர்கள் நிம்மதி..!

1
760

இங்கிலாந்தில் நடந்த ஒரு போட்டியின் முடிவில் அம்பையர்களிடம் இருந்து அப்போட்டியில் பயன்படுத்தப்பட்ட பந்தை பெற்றுக்கொண்டார் தோனி. இது சமுக வலைதளத்தில் பெரும் பிரச்சனையா வெடித்தது.

இதுக்குறித்துப் பல சந்தேகங்கள் எழுந்தது. இதில் முக்கியமான ஒன்று தோனி உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாகவே தனது ஒய்வை அறிவிப்பார் என இந்தியா முழுவதும் பேசப்பட்டது.

தற்போது இதைப்பற்றித் தோனியே பேசியுள்ளார்,

ravi shastri

ரவி சாஸ்திரி

அம்பையர்களிடம் இருந்து பந்தை பெற்றது பவுலிங் கோச்யிடம் சந்தேகத்தைக் கேட்ட தான் தோனி இதைச் செய்தார். மேலும் இவருக்கு ஒய்வெடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியில் பயிர்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

MS Dhoni

2019 உலகக் கோப்பை

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்று கொடுத்த தோனி, தற்போது 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை இலக்காக வைத்து தனது பயிற்சி மற்றும் திட்டத்தை வகுத்து வருகிறார்.

தோனி தற்போது இந்திய அணியின் கேப்டனாக இல்லையென்றாலும் உலகக் கோப்பை வெல்வதில் அவருக்கு அனுபவம் உள்ளது.

தோனி

2019 உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைப்பெற உள்ள நிலையில், இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்த ரிவர்ஸ் ஸ்விக் பவுலிங்-ஐ எப்படி எதிர்கொள்வது, எப்படிப் பவுலர்களுக்குப் பழக்குவது என்பதை ஆய்வு வேண்டும்.

MS Dhoni

இந்தியா வலிமை

எதிர் அணிகளுக்கு ரிவர்ஸ் ஸ்விக் பவுலிங் சிறப்பாக வரும் போது நாமும் அதைத் திறம்படச் செய்ய வேண்டும் இல்லையெனில் இது வெற்றி வாய்ப்பை குறைத்துவிடும். ஆகவே இதனைப் பயிற்சி செய்யத் தான் பந்தை அம்பயரிடம் இருந்து வாங்கினேன் எனத் தோனி கூறியுள்ளார்.

MS Dhoni

இங்கிலாந்து போட்டி

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியா 3 போட்டிகளில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் உலகக் கோப்பையைக் கணக்கில் வைத்துக் கொண்டு தான் பந்தை வாங்கியுள்ளார் தோனி.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here