தோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..!

0
2131

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இன்றைய தலைமுறையில் கிரிக்கெட் கடவுளாகப் பார்க்கப்படும் தோனியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருப்பதாக இந்திய அணியில் முன்னாள் வேக பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் மகேந்திரசிங் தோனி சேர்ந்த நாளில் முதல் ஆசிய கோப்பையில் அவர் சொதப்பியதை போல் இதுநாள் வரை செய்ததில்லை. மேலும் ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி சிறப்பாக விளையாடுவது கவனிக்க வேண்டியது.

37 வயதாகும் தோனி 16 ஐபிஎல் போட்டியில் சுமார் 455 ரன்கள், 5 அரைசதம் எனச் சராசரியாக ஒவ்வொரு போட்டியிலும் சுமார் 75.83 ரன்களை எடுத்துள்ளார்.

ஆனால் தோனி இந்த வரும் விளையாடிய 10 ஒருநாள் போட்டியில் வெறும் 225 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஒவ்வொரு போட்டிக்கும் சராசரியாக 28.12 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் தோனியின் அதிகப்படியான ரன்களே 42 தான் என்பது வருத்தமான விஷயம்.

ஐபிஎல் போட்டிக்குப் பின் தோனி விளையாடி ஒரு நாள் போட்டியில் இவருடைய ரன்கள் இது தான் 37, 42, 0, 33, 8 மற்றும் 36.

MS Dhoni

இந்நிலையில் முக்கியச் செய்தி இதழில் வெங்கடேஷ் பிரசாத் தோனியை பற்றி எழுதியுள்ளார். “ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 வாரம் அதிரடி கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் தலைமையிலான அணி ஆசிய கோப்பையைப் பெற்றது. இதன் மூலம் அடுத்த வருடம் உலகக் கோப்பைக்கு இந்த அணி தயாராகி வருகிறது. ஆனால் அணியின் நடு வரிசையைச் சரி பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தோனி ஒரு பேட்ஸ்மேன் ஆகத் தலையெடுக்க வேண்டும். ஒரு பக்கம் ரிஷாப் பன்ட் சிறகுடன் பறக்க காத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் மறுபுறம் தோனியின் விக்கெட் கீபிங் திறன் மிகவும் சிறப்பாக உள்ளது” எனக் கூறியுள்ளார் வெங்கடேஷ் பிரசாத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here