சைலண்டாக சாதனை படைத்துக் கொண்டிருக்கும் டாப் 8 தமிழச்சிகள்!

0
1091

இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்களைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திருப்பீர்கள். #SouthNewsTamil இணையதளத்தின் இக்கட்டுரை மூலமாக சாதனை தமிழச்சிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். இப்பெண்கள் விளையாட்டு, சினிமா, தொழில், கல்வி, காவல்துறை, இலக்கியம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நட்சத்திரங்களாய் மின்னிக்கொண்டிருப்பவர்கள். மகளிர் தின சிறப்புக் கட்டுரைத் தொகுப்பாக உங்களுக்கு வழங்கியிருக்கிறோம்.

 

1. மலேசிய இசைக்குயில் – ஜாக்லின் விக்டர் 
புகழ் பெற்ற பாடகியான இவர் மலேசிய தமிழ்க் குடும்பத்தை சேர்ந்தவர். மலேசிய திரைப்பட நடிகையாகவும், தொலைக்காட்சி தாரகையாகவும், பாடகியாகவும் ஜோளித்துக்கொண்டிருக்கிறார். கோலாலம்பூர் பொழுதுபோக்கு விடுதிகளில் கைத்தட்டல்களை பரிசாக பெற்றுக்கொண்டிருந்த இவரது குரலை சோனி நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. ‘மலேசியன் ஐடல்’ என்ற மிகவும் பிரபலாமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில், மலேசியாவின் ஆராதனை சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலேசிய வாழ் பெண்ணாகவும், முதல் தமிழ்ப் பெண்ணாகவும், முதல் இந்திய பெண்ணாகவும் ஜாக்லின் விக்டர் திகழ்கிறார். யூட்யூபிற்கு சென்று இவரது ஆல்பங்களை தேடிப்பிடித்து கேட்டு ரசியுங்கள். பெரும்பாலும் மலாய் மற்றும் ஆங்கில மொழியில்தான் பாடல்களை கொடுத்துள்ளார். நமக்கு மலேசிய மொழி புரியாவிட்டாலும் அவரது கம்பீரமான இனிய குரல் ‘பாடுவது உன் தமிழச்சியடா’ என சொல்லும்.

 

2. தமிழ் சினிமாவின் முதல் பெண் எடிட்டர் – கிருத்திகா 
சினிமாவைப் பொறுத்தவரை, நடிப்பதை தவிர பிற தொழில்நுட்பத் துறைகளில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவுதான். இயக்கம், ஒளிப்பதிவு பிரிவுகளில் ஒரு கை விரல்களில் எண்ணிவிடும் அளவிற்குதான் பெண்கள் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே எடிட்டிங் துறையில் இருக்கும் ஒரே பெண் எடிட்டர் கிருத்திகாதான். ஆணாதிக்கம் மிகுந்த சினிமா துறையில் ஒரு பெண் தனியாக பணியாற்றுவது என்பது சவாலனாது தான். ஒரு பெண் நடந்துகொள்வதில் தான் எல்லாம் இருக்கிறது என்கிறார் கிருத்திகா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here