இந்தியர்களுக்குப் பிடித்த கலர் இதுதான்..!

0
400

இந்தியா போன்ற நுகர்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் வருமான அளவிலும் அதிகளவிலான வித்தியாசங்கள் இருக்கும். இப்படி இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் லட்ச கணக்கில் விற்பனை செய்யப்படும் கார்களில் மக்கள் எந்த நிற காரை அதிகம் விரும்புகிறார்கள் எனத் தெரியுமா..?

ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் பிஏஎஸ்எப் கலர் ரிப்போர்ட் எனும் அமைப்பு எந்த வண்ணம் அதிகம் விற்பனையானது என்று துறைவாரியாகக் கணக்கெடுக்கும்.

அதில் ஆட்டோமொபைல் துறையில் செய்யப்பட்ட ஆய்வில் வெள்ளை நிற காரை தேர்வு செய்வோர் எண்ணிக்கை 41 சதவீதமாக உள்ளது. கார் வாங்க வேண்டும் என்ற உடனேயே பலரது தேர்வும் வெள்ளை நிறக் காராகத் தான் உள்ளதாம்.

இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது கருப்பு. ஆனாலும் கருப்பு நிற காரை விரும்புவோர் சதவீதம் வெறும் 16 மட்டுமே. இதையடுத்து கிரே நிற கார்களைத் தேர்வு செய்வோர் எண்ணிக்கை 13 சதவீதமும், வெள்ளி நிறத்தைத் தேர்வு செய்வோர் விகிதம் 9 ஆகவும் உள்ளது. மற்ற நிறங்களான நீலம் (8%), சிவப்பு (7%), பிரவுன் (2%), தங்க நிறம் (1%), ஆரஞ்சு (1%), பச்சை (11%), வயலெட் (1%) என ஒற்றை இலக்க அளவிலேயே பிற நிற கார்களைத் தேர்வு செய்வோர் விகிதம் உள்ளது.

வெள்ளை, கருப்பு, சாம்பல், சில்வர் ஆகிய நிறங்கள்தான் உலகம் முழுவதும் 80 சதவீத மக்களால் விரும்பப்படுகிறது. இதில் அதிகம் விரும்பப்படுவது வெள்ளை நிறமே.

வட அமெரிக்காவில் நான்கு கார்களில் ஒன்று வெள்ளையாகவும், ஐரோப்பிய நாடுகளில் மூன்றில் ஒன்று வெள்ளை நிறமாகவும் உள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தைப் பொறுத்தமட்டில் இந்த எண்ணிக்கை இரண்டு கார்களுக்கு ஒன்றாக வெள்ளை நிறத்தின் ஆதிக்கம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here