இந்தியாவின் ஃபேஷன் ஃப்ரீக் நரேந்திர மோடி போட்ட பிரபல கெட்டப்கள் ஒரு பார்வை!

0
3341

இந்திய பிரதமர் நிறைய பயணங்களை விரும்புபவர். நாட்டு மக்கள் கத்தினாலும் கதறினாலும், எத்தனை போராட்டங்கள் நடந்தாலும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் ஏரோபிளான் ஏறி நாடு நாடாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இரும்பு மனிதர் மோடி. வெண்தாடி வேந்தர் என ஊடகங்களே அவருக்கு பட்டம் சூட்டியிருக்கின்றன. தான் கால் பாதிக்கும் ஒவ்வொரு நாட்டிலும், அங்கு வாழும் மக்களின் கலாச்சார அம்சங்களை கிரகித்துக் கொண்டு, அதை தன் சொல், செயல், நடை, உடை, பாவனைகள் மூலம் வெளிப்படுத்தும் அற்புதமான மனிதர். நடிப்புத்திலகம் சிவாஜி கணேசனை விட அதிகமான வேடங்களை ஏற்றவர் மோடி. அவர் போடாத வேடங்களே இல்லை எனலாம். அதில் சில வேடங்களை இங்கே புகைப்படங்களாக பார்ப்போம்.

இது 2015ல் பாரக் ஒபாமா இந்தியாவிற்கு வந்தபோது அணிந்திருந்த குர்தா. அதில் நரேந்திர மோடி என தங்கத்தால் பெயர் எழுதப்பட்டிருந்தது.

இது தென்னாப்பிரிக்காவில் மோடி அணிந்திருந்த வெள்ளி சட்டை. தென்னாப்பிரிக்காவில் உயர்க்குல ஆண்கள் அணியும் ஷிம்மொரி ரக சட்டை.

இது நாகலாந்தில் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியில் ‘தோ’ எனும் ரகமான உடை. நாகரின மக்கள் விரும்பி அணியும் உடை.

ஹிமாலயாவின் பாலைவனப் பகுதிக்கு மின் திட்டத்தை துவக்கச் சென்றிருந்த மோடி இந்த உடையில் காட்சியளித்தார்.

அசாமில் கவ்ஹாத்தி நகருக்குச் சென்றிருந்தபோது ஜபி எனும் அப்பகுதி சார் அணிகலனான தொப்பியை அணிந்திருந்த காட்சி.

அருணாச்சலப் பிரதேசத்திற்குச் சென்றிருந்தபோது இந்த மகுடத்தை சூடியிருந்தார். விளையாட்டு பொருள் என எண்ணிவிட வேண்டாம்.

மோடி தனது 63வது பிறந்தநாள் விழாவில் அணிந்திருந்த விஷேசமான முண்டாசு இது.

இது 2013ல் மோடி, விழா ஒன்றில் அணிந்திருந்த பெரிய ரக முண்டாசு.

தேசியப் பறவை மயிலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தனது தலையில் அலங்காரம் செய்து கொண்டிருந்த காட்சி.

2014ல் அருணாச்சல பிரதேசத்திற்கு சென்றபோது மோடி அணிந்திருந்த கலாச்சார உடைகலன் இது.

அமிர்த்சர் தங்கக் கோயிலில் மோடி பிரார்த்தனை செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here