உயிரை பறிக்கும் மென்சஸ் கப்கள் – டாக்டர் இராஜபார்த்திபன் இரவிச்சந்திரன்

0
4919
Dr: இராஜபார்த்திபன் இரவிச்சந்திரன்

மாதவிடாய் நேரங்களில் வழக்கமாக உபயோகப்படுத்தப்படும் சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்றுதலாக, menstrual cup எனும் மென்சஸ் குப்பிகளைப்பயன்படுத்துவது தற்சமயம் கடந்த சில மாதங்களாக பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக முகநூலில் இயங்கும் பல பெண்களிடம் இருந்து ஆதரவுகள் பெருகி வருகின்றன.

 

அங்கீகாரம் அற்றவை:
ஒரு முறை செலவு, எரிச்சல் இல்லை ஆகிய காரணங்களை தாண்டி, சுகாதாரத்திற்கு கேடு தராதது என enthusiasticஆக பலர் பயன்படுத்த துவங்கியுள்ளது குறிப்படத்தக்கது. ஆனால், இந்த menstrual cupகள் இந்திய மருத்துவ குழுமத்தால் அங்கீகரிக்கப்படாதவை. இதை இந்தியாவில் தயாரிக்கும்/ இறக்குமதி செய்யும் நிறுவனங்களும் முறையான அங்கீகாரம் பெற்றவை அல்ல என்று குறிப்பிடுகிறார் மருத்துவர் இராஜபார்த்திபன் இரவிச்சந்திரன்.

உபயோக முறை:
இந்திய சமூக அமைப்பில் இந்த menstrual cupகளை உபயோக்கிப்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்று. மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே உபயோகிக்கப்படும் இதை ஏனைய 25 நாட்கள் எங்கே பத்திரப்படுத்தி வைக்கிறார்கள், இதை இப்படி sterilise செய்கிறார்கள் என்பதெல்லாம் புரியாத புதிர். இதை, யாரும் அங்கீகரித்திடாத ஒன்றை vaginaவில் insert செய்யும் அளவிற்கு இவர்கள் தன்னிச்சையாக யோசிப்பது முட்டாள்தனமான ஒன்று.

உயிருக்கே ஆபத்து:
பாலியல் கல்வியே இன்னும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத நாட்டில், பிறப்புறுப்பின் anatomy கூட பலரும் அறியாத நிலையில் அதனுள் இன்சர்ட் செய்யப்படும் இந்த mesntrual cupகள் ஆபத்தானவை. முறையான aseptic conditionல் பாதுக்காக்கப்படாத குப்பிகள், உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதையும் அவர் கூறுகிறார். டாக்ஸிக் ஷாக் சின்ட்ரோம், Toxic shock syndrome (TSS) என்ற நோய் Staphylococcus aureus எனும் ஒரு வகை பாக்டீரியாவினால் பரவும் நோய், இது menstrual cup மூலம் எளிதாக பரவும். மேலும் TSSன் வாழும் விகிதம் கிட்டத்தட்ட nil. இந்திய மருத்துவமனைகளில் அனுமதித்தால் உயிர் பிழைப்பது அரிது.

நோய் தொற்று:
இதை தவிற வேலை இடங்களில் cup நிரம்பி விட்டால் மாதவிடாய் ரத்தத்தை empty செய்வது, அதை மீண்டும் பொருத்துவது, இதன் மூலம் restroomல் இருந்து menstrual cup மூலமும் நோய்தொற்று ஏற்படுவது, இது கர்ப்ப பைக்குள் எளிதாக பரவி சீழ் பிடித்தல் போன்றவை கர்ப்ப பையை அகற்றுவதோடு நிச்சயம் உயிருக்கே ஆபத்தானதாக மாறும்.

அரசு பரிந்துரை இல்லை:
இந்திய சமூக சுற்றுச்சூழல் அமைப்பில், menstrual padகளை விட வேறெதையும் இந்திய மருத்துவ குழாம் பரிந்துரைப்பதில்லை என்பதை தெளிவுறப் புரிந்துக்கொள்ள வேண்டுகிறேன். படித்தவர்களும், பல முற்போக்காளர்களும் அரசால் பரிந்துரைக்கப்படாத cupகளை, அரசின் அங்கீகாரம் பெறாமல் தயாரிப்படுபவைகளை உபயோகிக்க எப்படி முன் வந்தார்கள் என்பதே எனக்கு வியப்பாக இருக்கிறது.

இந்த தேசத்தில் பாலியல் கல்வி மறுக்கப்படுவது தான் இதற்கெல்லாம் காரணம் என குறைப்பாடுகளை தயங்காமல் முன்வைத்துள்ளார் இரவிச்சந்திரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here