பெண்கள் மட்டும்: மென்சஸ் கப்பை உபயோகிப்பது, பராமரிப்பது எப்படி?

0
15484

சானிட்டரி நாப்கின் மீதான விழிப்புணர்வு இந்தியாவின் அனைத்து மகளிரையும் சென்றடைந்துள்ள நேரத்தில், இப்போது மாதவிடாய் கால தேவைக்காக மென்சஸ் கப் என்ற புதிய சாதனம் குறித்த அறிமுகங்கள் வெளியாகி வருகின்றன. இதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விரிவான தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

மென்சஸ் கப் என்றால் என்ன?
பெண்களின் மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின், டேம்பன் போன்றவற்றுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட வேண்டிய சாதனம் ஆகும். இது ஒரு சிறிய, நெகிழும் தன்மை உடைய, மணி வடிவம் கொண்ட கோப்பை போன்று இருக்கும். இது சிலிக்கானால் தயாரிக்கப்படுகிறது. டேம்பன் அல்லது நாப்கின்கள் மாதவிடாயின்போது வெளியாகும் ரத்தத்தை உறிஞ்சிக்கொள்ளும். ஆனால் இந்த மென்சஸ் கப் அவற்றை சேகரித்துக்கொள்பவை. வேண்டிய நேரத்தில் அதை வெளியில் எடுத்து அப்புறப்படுத்திக் கொள்ளலாம். இது நாப்கின் போல ஒருமுறை பயன்படுத்தத்தக்கது இல்லை. ஒரு கப்பை நீங்கள் பல முறைகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு கப் பல நாப்கின்களுக்கு சமமாகும்.

 

எப்படி பயன்படுத்துவது?
பொருத்துதல்:

 1. உங்கள் கைகளை நன்கு கோப்பு போட்டு கழுவ வேண்டும்.
 2. சவுகரியமான நிலையில் அமர்ந்து, அல்லது நின்று மென்சஸ் கப்பை செருகலாம்.
 3. செருகும்போது உடலை தளர்த்திக்கொண்டு ஆழமாக சுவாசிக்க வேண்டும்.
  இரு கைகளையும் பயன்படுத்தி, கப்பின் இரு பக்கங்களையும் விரித்து, C வடிவத்தில் கப்பை மடிக்கலாம்.
 4. சற்று வசதியாக, கீழ் விளிம்புப் பகுதியில் கப்பை பிடித்துக்கொண்டு, பிறப்புறுப்பின் இதழ்களை விரித்து, உள்ளே கப்பை செருக வேண்டும்.
 5. கப்பின் கைப்பிடி வெளியில் தெரியக்கூடாத அளவிற்கு 45 டிகிரி சாய்வாக செருக வேண்டும்.
 6. கப் இறுக்கமாக செருகப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக்கொண்டு, பிறகு கையை கழுவிக்கொள்ளுங்கள்.
 7. உங்களுக்கு மாதவிடாயின்போது எந்த அளவுக்கு திரவம் வெளியேறும் என்பதை பொறுத்து, நான்கு முதல் பன்னிரண்டு மணி நேரம் வரை மென்சஸ் கப்பை அணிந்து கொள்ளலாம்.

வெளியே எடுத்தல்:

 1. கைகளை சோப்பு போட்டு கழுவிக்கொண்டு, சவுகரியமான நிலையில் அமர்ந்து அல்லது நின்று, கப்பின் அடிபாகத்தை சற்று கீழ் நோக்கி இழுக்க வேண்டும்.
 2. கப்பை மெலிதாகும் படி, அழுத்தி மெதுவாக ஒரு பக்கத்தை முதலில் வெளியே இழுக்கவும், பிறகு மறுபக்கத்தை எடுக்கவும்.
 3. கப் வெளியில் வந்ததும், மாதவிடாய் ரத்தம் கீழே சிந்தாமல் அதை கழிவறையில் கொட்டி அப்புறப்படுத்தி விடலாம். அடுத்த பக்கத்தில்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here