வந்துவிட்டது ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை..!

0
608
ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை இருக்கு உங்களுக்கு தெரியுமா..!

குழந்தை பிறப்பை தவிர்க்க விரும்பும் தம்பதிகள் அதற்காக அறுவை சிகிச்சை அல்லது கருத்தடை மாத்திரைகள்  உள்ளன என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்த கருத்தடை மாத்திரை அல்லது அறுவை சிகிச்சை முறையும் பொதுவாக பெண்களுக்காகவே மட்டுமே இருந்துள்ளது. ஆண்களுக்கு மாத்திரைகள் இல்லை, ஆனால் அறுவை சிகிச்சை மூலமாக மட்டுமே கருத்தடை செய்யப்பட்டது வந்துள்ளனர். அல்லது ஆணுறை பயன்படுத்தி விந்து அண்டதில் செல்லாமல் தடுத்து குழந்தை பிறப்பை தடுத்தனர் ஆண்கள்.

ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை இருக்கு உங்களுக்கு தெரியுமா..!

கருத்தடை மாத்திரை:

தற்போது மருத்துவர்கள் ஆண்களுக்கு என்று புதியதாக கருத்தடை மாத்திரையை கண்டுபிடித்துள்ளனர். வாஷிங்டன் பல்கலைக்கழத்தில் உள்ள மருத்துவ பேராசிரியர் உள்ள ஸ்டீபன் பேஜ் என்பவர் இம்முயற்சியில் வெற்றிப்பெற்றுள்ளார். 100 பேரிடம் இந்த ஆய்வினை மேற்க்கொண்டுள்ளார்.

18 வயதிலிருந்து 50 வரை உடைய நல்ல ஆரோக்கியமான ஆண்கள் இம்மாத்திரையை பயன்படுத்தலாம். இந்த மாத்திரையை தினமும் ஒன்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் பின்விளைவுகளோ, பாதிப்புகளோ ஏற்படாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று வகை:

ஆண்களின் இந்த கருத்தடை மாத்திரைக்கு டைமெதென்ட்ரலோன் அன்டிகோனேட் அல்லது டி.எம்.ஏ.யூ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாத்திரை மூன்று வகைகளில் 100மி.கி, 200மி.கி மற்றும் 400மி.கி என்று உள்ளது. தினமும் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்வதால் விந்து உற்பத்தியை தடுக்கிறது. அதனால் பெண்களின் அண்டத்தில் விந்து அணு நுழைவதில்லை. ஏனவே குழந்தையும் பிறப்பை தவிர்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here