ஒரு டிரஸ் போட்டது குத்தமாடா.. பிரிட்டன் அரச குடும்பத்தால் ஏற்பட்ட தாக்கம்..!

0
1466

பிரிட்டன் இளவரசர் ஹேரி-யின் மனைவியின் மேகென் மார்கல் அதுவரை அரசு குடும்பத்தின் கட்டுப்பாடுகள் அனைத்தையும் உடைத்து புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். ஆனாலும் சில முக்கியமான அரசு கட்டுப்பாட்டை ஏற்று அதற்கு ஏற்ப நடந்து வருகிறார்.

இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் மேகென் மார்கல் ஒவ்வொரு முறையும் வெளியில் வரும்போது சிறப்பான ஆடை அணிந்து வரும் நிலையில், மேஹியூவ்-இல் நடைபெற்ற விலங்கு நல அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேகென் மார்கல் மலிவான ஆடையை அணிந்து சாமானிய மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த மேகென் H&M நிறுவனம் விற்பனை செய்யும் பெய்ஜ் கலர் கினிட் ஆடையை அணிந்து வந்திருந்தார். இவரின் புகைப்படம் வெளியான அடுத்த நொடி முதல் இண்டர்நெட் முழுவதும் மேகென் மார்கல் மற்றும் இந்த ஆடை டிரெண்டாது.

இந்த ஆடையின் விலை என்னவோ வெறும் 35 டாலர் தான். அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொதுவாக அதிக விலை உடைய ஆடைகளையே அணிவது வழக்கம். அதைப் பார்த்து மக்கள் வாய்யை பிளப்பது மட்டுமே இதுவரை நடந்து வந்த நிலையில்.

முதல் முறையாக அரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அணியும் அதே ஆடையைச் சமானியர்களும் அணியும் வகையில் மேகென் மெர்கல் ஆடை அமைந்திருந்த காரணத்தால் மக்கள் மத்தியில் இந்த ஆடைக்குப் பெரிய அளவிலான வரேவேற்பு கிடைத்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் அதைப் பார்த்த மக்கள் H&M நிறுவன தளத்தில் இந்த ஆடையை அடுத்தடுத்த ஆர்டர் செய்யத் துவங்கினர். இதனால் நிறுவனத்திலேயே இந்த ஆடை ஸ்டாக் தீர்ந்து விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here