ஒரு ஸ்பூன் தேன் இருந்தால் போதும்!! இந்த பிரச்சனை எல்லாம் குணப்படுத்தலாம்!!

0
181

பலவிதமான ஆயிரக்கணக்கான் மருத்துவ சத்துக்கள் நிறைந்த பூக்களிடமிருந்து
பெறப்படும் தேன் நமக்கு பாற்க்டல் கடைந்தெடுத்த அமிர்தத்திற்கு ஒப்பானது. தினமும்
தேன் சில துளி பருகினால் போதும் .. மார்க்கெண்டேயன் போல் என்றும் இளமையுடன்
வாழலாம்.

தேனை பலவித பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுத்தலம. பக்க விளைவுகள்
இல்லை. நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்தவை. புற்று நோயை முதுமைக்கு
எதிராக செயல்படும்.


மருத்துவப் பலன் – 1 :

தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம்,
தலைவலி குணமாகும்.

மருத்துவப் பலன் – 2 :

தேனும், வெந்நீரும் கலந்து அருந்திவர பருத்த உடல் மெலியும். ஊளைச்சதை குறையும். உடல் உறுதி அடையும்.

 

மருத்துவப் பலன் – 3 :

அடிக்கடி ஜலதோஷம் பிடித்தால் இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள்தூள், ஒரு ஸ்பூன்
தேன்கலந்து தினமும் பருகிவந்தால் படிப்படியாக கபம் கரையும்.

 

மருத்துவப் பலன் – 4 :

உடல் ஒல்லியானவர்கள் தினமும் பாலில் தேன் கலந்து சாப்பிட்டுவர உடல் நிலை
சீராகும்.

மருத்துவப் பலன் – 5 :

தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டுவந்தால் கண் பார்வை தெளிவாகும்.

மருத்துவப் பலன் – 6 :

வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் போன்றவற்றிற்கு நிவாரணம் கிடைக்கும்.

மருத்துவப் பலன் – 7

தேனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தவிருத்தியும் ஏற்படும். நரம்புத்தளர்ச்சியும் குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here