கணக்கு ஆசிரியர் பிச்சை எடுக்கும் அவலம் தவிக்கவிட்ட கணவர் மற்றும் மகன்!

0
1690

பள்ளிக்கூடத்தில் கணக்கு ஆசிரியாக வேலை புரிந்த பெண் ரயில் நிலைய வாசலில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு அவலம் நடந்தேரியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ரயில் நிலையத்தில் வித்யா என்ற அரசு ஊழியர் தனது தோழியை அழைத்து வர ரயில் நிலையம் சென்றுள்ளார். அப்போது அங்கு பிச்சை எடுத்துக் கொண்டியிருந்த பெண்ணிடம் பேசியுள்ளார். அப்போழுது தான் தெரிந்தது. அவர் பள்ளியில் கணக்கு ஆசிரியரியாக பணிபுரிந்துள்ளார். அவரின் பெயர் வால்சா என்பதை அறிந்த வித்யா அவரை புகைப்படம் எடுத்து அவரின் நிலைமையும் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த வால்சா பள்ளி மாணவர்கள் பலர் கவனித்துக்கொள்ள முன்வந்தனர் ஆனால் அவர் போக மறுத்துவிட்டார். தன் கணவர் மற்றும் மகனுடன் மட்டுமே செல்வதாக கூறினார். தற்போது வால்சாவின் சகோதரி மற்றும் உறவினர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட துணை ஆட்சியர் மூலம் மீட்கப்பட்டு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் கணவர் மற்றும் மகனை தேடும் பணி நடந்து வருகிறது. விரைவில் குடும்பத்துடன் வல்சா இணைவார் என தான் நம்புவதாக வித்யா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here