காதலர் தினத்தில் உங்களுக்காக ஒரு உண்மையான காதல் கதை!

0
2383

காவியங்களிலும், சங்க இலக்கியத்திலும்தான் காதல் கதைகள், காதலர்கள் வருகிறார்களா? இவைகளையெல்லாம் தாண்டி நம்மிடையே வாழ்ந்த உன்னதமான சில மனிதர்களின் மகத்தான காதல் கதைகள் நிகழ்ந்துள்ளன. அதில் குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் காதல் மனைவி மதிவதனியின் காதலைச் சொல்லலாம்.

பிரபாகரன் அறிமுகம்:
1983 ஜூலை, ஈழத்தில் சிங்களத்தால் நிகழ்த்தப்படும் அடக்குமுறை தாக்குதலைக் கண்டு வெகுண்டெழுந்து, பிரபாகரன் வீட்டை விட்டு வெளியேறி தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தை துவங்குகிறார். மாபெரும் இனப்படுகொலை அது. அம்மாதமும் தமிழர்களின் கருப்பு ஜூலை என்றே பதிவாகிறது. தென் மாகாணங்களில் இருந்து தமிழ் மக்கள் வடக்கு நோக்கி விரட்டப்படுகின்றனர். படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் தங்கள் உயிரை மட்டுமல்ல கல்வியையும் கையில் பிடித்துக்கொண்டே ஓடிவந்தனர். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணங்களில் குடியமர்ந்து, அங்குள்ள கல்லூரிகளில் சேர விரும்பினார்கள். ஆனால் அவர்களது கனவுகளை சிங்கள பேரினவாத அரசு கல்லூரி வாசலிலேயே தடுத்து நிறுத்தியது.

மதிவதனி அறிமுகம்:
கல்விச் சுதந்திரத்தை பறிக்கத் துடிக்கும் சிங்கள அரசை எதிர்த்து 1983 – ஜனவரி – 4ம் தேதி, 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்மாணவிகளில் ஒருவர்தான் மதிவதனி. நம்முடைய ஹீரோயின். ஒட்டுமொத்த தமிழீழ மக்களுடைய ஆதரவும் அவர்களுக்கு கிட்டுகிறது. யாழ் முழுவதும் கருப்புக்கொடி பறக்கிறது. இலங்கையின் அன்றைய பிரதமர் ஜெயவர்தனா இப்போராட்டங்களை கண்டுகொள்ளவில்லை. இந்த மாணவர்கள் உண்ணாமல் இருந்து சாகட்டும் என அமைச்சுகள் காட்டம் காட்டினர். களத்தில் நின்ற பிள்ளைகள் சற்றும் அஞ்சவில்லை. நெஞ்சுரம் குறையாமல் போராடினர்.

சென்னையில் மதிவதனி:
போராட்டம் தொடங்கி ஆறாவது நாள் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. போராட்ட பந்தலில் இருந்து அம்மாணவ மணிகளை விடுதலைப் புலிகள் அழைத்துச் சென்றனர். ஆனால் செய்தி தவறாக பரவியது. மாணவர்களை புலிகள் கடத்தியதாக பொய்யான தகவல் பரப்பப்பட்டது. உண்மையில், இம்மாணவ மாணவிகள் சென்னையில் உள்ள பிரபாகரன் இல்லத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். மதிவதனி தனது நண்பர்களுடன் பிரபாகரனின் திருவான்மியூர் வீட்டில் தங்கினார்.

காதலில் விழுந்தாள்:
பிரபாகரனை அருகில் இருந்து நேசிக்கத் தொடங்கினார் மதி. ஹோலி பண்டிகையின்போது வர்ணத் தெளிப்பை ஊற்றி விளையாடினார். ஆனால் பிரபாகரனிடம் இருந்து கோபமே வெளிப்பட்டது. நம்ம ஹீரோ சீரியஸ்வாதி இல்லையா? மதிவதனியை கடிந்துகொண்டார். உடனே மதிவதனியின் கண்களில் கண்ணீர் பூத்தது. பிறகே சமாதானம் செய்துள்ளாராம் பிரபாகரன். இந்த சின்ன சண்டைதான் இருவருக்கும் இடையே காதல் மலர காரணாமாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here