மகா சிவராத்திரியில் மட்டும் பல நிறம் மாறும் லிங்கம் நம்ம தமிழ் நாட்டுல எங்கிருக்கு?

0
45

லிங்க உருவம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உட்பட்டது. உருவமற்றது, அருவமானது, லிங்கத்தின் அமைப்பைப் பற்றியதான சர்ச்சைகளும் பல ஆண்டு காலமாக உள்ளது.இருப்பினும்… எல்லாவற்றிற்கும் மூலமாக விளங்கும் லிங்கத்திலிருந்துதான் உருவ பூஜைகள் தொடங்கியிருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

லிங்க பூஜைகள் இந்தியா முழுவதும் பிரசித்தி பெற்றவை. அதிலும் இந்த இடத்தில் இருக்கும் லிங்கம் கூடுதல் விசேஷமானது. ஏன் தெரியுமா? அங்கிருக்கும் கோவிலில் இருக்கும் லிங்கம் சிவராத்திரி அன்று மற்றும் பல நிறங்களில் தோன்றும். அந்த கோவில் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் பார்க்கலாம்.

சொர்ணகடேஸ்வரர் கோவில் :

சொர்ண கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ள ஊர் நெய்வணை. விழுப்புரத்திலிர்ந்து 53 கிலோமீட்டர் தூரத்தில் இக்கோவிலை அடையலாம். திருக்கோவிலூரிலிருந்து 20 கி.மி. தூரத்தில் இருக்கின்றது. பண்ருட்டியிலிருந்து 60 கி.மி. தொலைவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்ல நகரத்திலிருந்து பல்வேறு பேருந்து வசதிகள் இருக்கின்றன.

கோவில் அமைப்பு :

இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில் நந்தி மண்டபமும் காணப்படுகிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் திருஞானசம்பந்தர், நாவுக்கரசரர், மாணிக்க வாசகரர் போன்ரவர்களுக்கும் சன்னிதிகள் இருக்கின்றன.

சைவத் திருமறைகளில் தேவாரப் பாடல்கள் இயற்றிய திருஞான சம்பந்தர் இந்த கோவிலை வந்தடைவதற்கு முன் இருட்டிவிட்டதால் திக்கு தெரியாமல் இருந்தவரை சிவன் பார்வதியின் மூலமாக இக்கோவிலுக்கு வழிக்காட்டினார்.

அதநால் மகிழ்ச்சியடைந்த சம்பந்தர் ஆடிப்பாடி நன்றி கூறும் சிலை அவர் சன்னிதியில் இருக்கின்றது.

நிறம் மாறும் லிங்கம் :

மகாசிவராத்தியின் போது மட்டும் அதிகாலையில் சூரிய ஒளிக் கற்றைகள் லிங்கத்தின்மீது படர்கிறதாம். அப்போது லிங்கம் நீலம், வெள்ளை, சிவப்பு பச்சை என பல நிறங்களில் மாறி பக்தர்களுக்கு தரிசனம் கிடைக்கிறது.

பெயர்க் காரணம் :

ஒரு சமயம் இக்கோவில் உள்ள இடத்தில் இருந்த பெரிய ஏரி ஒன்று உடைந்து ஊருக்குள் வெள்ளம் வந்திருக்கிறது. அதனால் அங்கிருந்த மக்கள் கோவிலுக்குள் சென்று வணங்கினர். அதனால் சிவன் இளைஞனாக மாறி ஒவ்வொருவரின் வீட்டிலிருந்தும் ஒரு நெல் மூட்டையை பெற்று ஏரியின் வெள்ளத்தை அடைத்தாராம். இதனால் நெல் அணை என்ற பெயர் உருமாறி நெய்வணை எனறு பெயர் பெற்றதாம்.

நடை திறக்கும் நேரம் :

இக்கோவிலின் நடை காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் திறக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here