விவேகம் படத்தில் இதையெல்லாம் கவனித்தீர்களா?

0
23155

வீரம், வேதாளம் படங்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் சிவா-அஜித் கூட்டணி இணைந்திருக்கும் படம் ‘விவேகம்’. படத்தில் நடிப்பு என்பது மருந்திற்கு கூட இல்லையென்றாலும் அஜித்திற்கு சில காட்சிகளில் மிக ஆழமாகவே நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நிறைய ஆக்‌ஷன் காட்சிகள், தொழில்நுட்ப காட்சிகள் காட்டப்பட்டிருந்தாலும், இடையிடையே காஜலுக்கும் அஜித்திற்குமான காதல் காட்சிகளை உருக்கமாகவே செதுக்கியுள்ளார் இயக்குநர் சிவா. குறிப்பாக கணவன்-மனைவி உறவு என்பது எவ்வளவு ஆழமானதாக, எவ்வளவு உன்னதமானதகாக இருக்க வேண்டும் என்பதை இப்படத்தில் மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

அன்பான கணவர்:

அஜித் என்னதான் தீவிரவாத தடுப்புப் படையில் மிகப்பெரிய அதிகாரியாக இருந்தாலும், மனைவி என்று வரும்போது அன்பான கணவராக காட்டப்படுகிறார். எந்த நேரத்திலும், அவரைச் சுற்றி எப்படிப்பட்ட போர் சூழல் உருவாகியிருக்கும்போதும், அவர் எந்த மாதிரியான கஷ்டத்தில் இருக்கும்போதும் தன்னுடைய மனைவியை மிக அழகாக அன்பாக பொறுப்பாக பார்த்துக்கொள்ளும், அவளை அனுசரிக்கும் ஒரு கணவராக இருக்கிறார். இன்னொரு காட்சியில், அஜித் வேலைக்காக வெளிநாடு செல்லும்போது, தான் கர்ப்பம் அடைந்திருப்பதை சொல்லாமல் வழியனுப்பிவைப்பார் காஜல். அவரது ட்ராவல் பேக்கில் ‘அவர் அப்பா ஆகப்போகும்’ விடயத்தை எழுதி வாழ்த்துக்களையும் தெரிவித்திருப்பார். இது மகிழ்ச்சியான செய்தி என்றாலும், கணவர் எண்ணி செல்லும் வேலை தடைபட்டுவிடும் என சொல்லாமல் சொல்லியிருப்பார் காஜல்.

அழகான மனைவி:

ஒரு திருமண நிகழ்ச்சியில் அஜித்-காஜல் தம்பதியினராக பங்கேற்க செல்லும்போது காஜலை பேச சொல்லுவார்கள். காஜல் பேசும்போது, கணவர் என்பவர் மனதோடும், உடலோடும், ஆன்மாவோடும் கலந்திருக்கும் ஒருவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கணவரை நான் அடைந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது என்று கூறுவார். அந்த இடத்தில் அவர்களுக்கிடையேயான தாம்பத்தியத்தை, ஒருவருக்கொருவர் கொண்டுள்ள புரிதலை உணரமுடியும்.

காதலின் வலிமை:

ஒவ்வொரு முறையும் அஜித், தனது வேலைக்காக மனைவியை விட்டு பிரிந்து செல்லும்போதும், கணவரின் வேலை அவ்வளவு ஆபத்துக்கள் நிறைந்தது என தெரிந்திருந்தும், அவள் மிக தைரியமாக அவரை வழியனுப்பி வைக்கிறாள். அப்படியான ஒரு காட்சியில், ‘நீங்கள் இந்த நாட்டை காப்பாற்றும் பணியில் இருக்கும்போது பெருமையாக இருக்கிறது; ஆனால் அதே நேரத்தில் நீங்கள் மீண்டும் உயிரோடு திரும்பி வருவீர்களா என்று பயமாகவும் இருக்கிறது என்று வசனிப்பார் காஜல் அகர்வால். அதற்கு அஜித், ‘ நான் திரும்பிவருவேன் என்று உன் நம்பிக்கை குறையாமலிருக்கும் வரை எனக்கு எதுவும் ஆகிவிடாது’ என்று சொல்லுவார். உருக்கமான காதலை வெளிப்படுத்தும் காட்சி அது.

Vivegam Movie Bangalore Response

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here