கும்பம் :சனி பெயர்ச்சி 2017

0
9643

 

இது வரை பத்தாம் இடத்தில் சனிபகவான் அமர்ந்து, பிழிய பிழிய வேலை வாங்கி, சொற்ப பலனை தந்து ஏமாற்றங்களை வழங்கியவர் இனிமேல் லாப ஸ்தானத்தில் பதினோறாம் பாவத்தில் அமர்ந்து, லாபங்களை வாரி வழங்கி சந்தோசத்தை தரப்போகிறார்.

படிப்பிற்கேற்ற, திறமைக்கேற்ற. வேலை இல்லாமல் வேதனை பட்ட்டவர்கள், குறைந்த சம்பளத்திற்கு வேலைப்பார்த்தவர்கள், இனிமேல் தகுதிக்கேற்ற வேலையும், ஊதிய உயர்வும், பதவி உயர்வும், பெற்று வாழ்வில் வளம் பெறப்போகிறார்கள். மதிப்பு, கௌரவம், தகுதி, உயரும். பிறரால் தன லாபம் கிட்டும். நினைத்த காரியம் கைகூடும்.

பெண்களால், மனைவியால் லாபம் கிட்டும் .பொருளாதார முன்னேற்றம் இனி தடையின்றி உயரும். கடன் நீங்கி சேமிப்பு கூடும் .வியாபாரத்தில் கணிசமான லாபத்தை தொடர்ந்து பெறுவீர்கள்.பகைவர்கள் கூட நண்பர்களாக மாறி விடுவார்கள். கடன் ,வழக்கு, எதிரி பாதிப்பு இல்லாமல் போய்விடும். வீடு ,வாகனம் நட்டம் மாறி லபமாகும்.

குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி, நிம்மதி கிட்டும். பழையதை விற்று புதியது வாங்கலாம். வெளிநாட்டு வாய்ப்பு தேடி வரும். இடமாற்றம், வேலைமாற்றம் லாபம் தருவதாக இருக்கும். ஆகவே ,இந்த சனி பெயர்ச்சி 95%நற்பலனைவாரி வழங்கப்போகிறது. எந்த லக்கனத்தில் பிறந்தவராக இருந்தாலும் லாப சனி பாதிப்பை தராமல் நன்மையே தந்து மகிழ்விப்பார். வாழ்த்துக்கள்.!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here