சிவாஜியின் வயது- 90!! சில குறிப்புகள்

0
572

நடிப்பின் சிகரமான சிவாஜி கணேசனின் பிறந்த நாள் இன்று. 90 வது பிறந்த நாள். நடிப்பென்றால் எல்லாருக்கு நினைவிற்கு வருவது சிவாஜி கணேசன் தான். சிலர் அவரின் நடிப்பை மிகை என்று சொன்னாலும் அந்த காலக் கட்டத்தில் நடிப்பு என்பது சற்று மிகையாகவே எதிர்ப்பார்க்கப்பட்டது.
அவரும் அப்படியே நடித்து அவரின் நடிப்பிற்கு மிஞ்சிய வேறு எவரும் இல்லை. அவருடைய வாழ்க்கை இந்திய சினிமா வரலாற்றில் ஒரு தனித்துவம் பெற்றது.

சிவாஜி கணேசன் அக்டோபர் 1 ஆம் தேதி விழுப்புரத்தில் பிறந்தவர். இதுவரை 300 க்கும் அதிகமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். நாடகங்கள் மூலம் சினிமாவிற்கு வரவழைக்கப்பட்டார்.

சிவாஜி பெயர் காரணம் :

சிவாஜி கணேசன் மேடை நாடகங்களில் நடித்து வந்தவர். அப்போது சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்ற நாடகத்தில் வீர சிவாஜியாக நடித்த இவரின் நடிப்பைக் கண்டு மெச்சிய தந்தை பெரியர இவருக்கு ” சிவாஜி” கணேசன் என்று பட்டப் பெயர் அளித்து விளித்தர. அதன் பின் அவருடைய பெயர் நிரந்தரமாக சிவாஜி கணேசன் என்று ஆனது.

அவர் பராசக்தியில் நடிப்பதற்கு தேர்வான போது தயாரிப்பிற்கு பண உதவி செய்த ஏ.வி.எம் செட்டியாருக்கு, புதுமுகமான இருந்த சிவாஜியின் நடிப்பு பற்றி நம்பிக்கையில்லை. இருப்பினும் அப்படத்தின் இயக்குனர்கள் அவரை தேர்வு செய்து கருணாநிதி வசனத்தில் 1952 இப்படம் வெளிவந்தது. அதோடு இப்படம் பெரும் வெற்றியடைந்தது.

பலரது வாழ்க்கையைப் பார்த்து அவர்களின் அனுபவங்களை உட்கிரகித்து தனது நடிப்பை வெளிப்படுத்தியதாக அவரே ஒரு முறை சொல்லியிருந்தார்.

இவர் மற்ற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். 9 தெலுங்கு திரைப் படங்கள், 2 ஹிந்தி பட்டங்கள் மற்றும் 1 மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.

பெற்ற விருதுகள் :

ஆப்பிரிக்க ஆசிய திரைப்படவிழாவில் சிறந்த நடிகருக்கனா விருது பெற்றுள்ளார். பின்னர் கலைமாமணி இருது, பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருத், செவாலியே விருது, தாதாசாகெப் பால்கே விருது என அவர் அயல் நாடு விருது உட்பட பல விருதுகள் வாங்கியிருக்கிறார். ஆனல தேசிய விருது ஒரு முறைக் கூட வாங்க வில்லை என்பது அவருக்கும், ஏன் தமிழ் மக்களுக்கும் அவர் ரசிகர்களுக்கும் இருந்த பெரிய ஆதங்கம் அது.

குடும்ப வாழ்க்கை :

சிவாஜி கணேசன் குடும்பத்தில் இரண்டாவது மகனாக பிறந்தார். அவருக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு. இவருக்கும் கமலா விற்கும் 1952 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரபு, ராம் குமர உட்பட நான்கு பிள்ளைகள்.

இறப்பு :

நுரையீரல் பாதிப்பின் காரணமாக ஜூலை-21 ஆம் தேதி, 2001 ஆம் ஆண்டு அப்போல்லோ மருத்துவமனையில் இறந்தார். தோன்றறின் புகழோடு தோன்றுக ” என்ற குறளுக்கேற்ப தன்னுடைய வாழ்வை ஒரு அர்த்தமுள்ளதாக்கி வாழ்ந்துள்ளார். சினிம உலகம் என்று இருக்கும் வரை , நடிப்பின் மாமேதையான சிவாஜியின் பெயரும் அதன் கல்வெட்டில் முதல் பெயராக பதிந்திருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here