விஸ்வரூபம்2 திட்டமிட்டபடி ஆக10ஆம் தேதி வெளியாகும்.. கமல் அதிரடி..!

0
344

மர்மயோகி திரைப்படத்தில் நடக்கப் பிரமீட் சாய்மீரா நிறுவனம் கமலுக்கு 4 கோடி ரூபாய்ச் சம்பளமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படம் தடைப்பட்டு நிற்கவே, கொடுக்கப்பட்ட சம்பளத்தைத் திருப்பி அளிக்காமல் கமல் ஏமாற்றுவதாகவும், இப்பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் வரை விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என இந்நிறுவனம் சென்னை உயர்நி புகார் அளித்துள்ளது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஸ்வரூபம் 2 திரைப்படம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 10ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிறுவனம் சம்பள பணத்தை வட்டியுடன் சேர்த்து 5.44 கோடி ரூபாய் திருப்பி அளிக்கும் வரையில் விஸ்வரூபம் 2 திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்றும், பணத்தை முறையாகச் செலுத்தும் வரையில் படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் எனப் பிரமீட் சாய்மீரா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

மனுவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இப்புகார் தொடர்பாக நோட்டீஸ் கமலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 6ஆம் தேதி நடக்க உள்ளது.

இதனால் ஆகஸ்ட்6ஆம் தேதிக்கு பின்னரே விஸ்வரூபம் 2 திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திட்டமிட்டபடி வெளியாகுமா ஆகாதா என்று தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here