கமலின் அரசியல் பிரவேசம்… விரைவில் பிரஸ் மீட் வைக்கிறாராம்!

0
369

சென்னையில் நடந்த தமிழ் தலைவாஸ் PRO கபாடி அணி சீருடை அறிமுக விழாவில் கலந்துகொண்டு பேசினார் நடிகர் கமல்ஹாசன். கபாடி அணியினர், பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரது எதிர்ப்பார்ப்பாகவும் இருந்தது அவரது பேச்சு. அதற்கு தகுந்தாற்போல தீனி போட மறக்கவில்லை கமல்.

ஒருவையில் பேசுவோருக்கு மத்தியில் தலைவாஸ் என பெயர் வைத்தது சிறப்பு என கூறி நடப்பு அரசியலை தொட்டுச் சென்றார் கமல். இப்போதெல்லாம் கமலின் ஒவ்வொரு அசைவும் மக்களால் கவனிக்கப்படுகிறது என்றே சொல்லலாம். அவரிடம் ‘எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?’ என்ற கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டன மீடியாக்கள். கமல் அமைச்சர் ஜெயக்குமாருக்கும், ஹெச்.ராஜாவுக்கும் விட்டிருந்த தனது அறிக்கையில் “நான் அரசியலுக்கு வந்து பல வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் ஜெயக்குமார் அறியவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இனி அவர் அதிகாரப்பூர்வமாக எப்போது முழு நேர அரசியலில் இறங்குவார் என்று கேமிராக்களும், மைக்குகளும் காத்திருக்கின்றன. அவர் போகும் இடமெல்லாம் இதே கேள்விகள் அவரிடம் கேட்கப்படுகின்றன. இப்படித்தான் கபாடி அணி சீருடை அறிமுக விழாவிலும் மீடியாக்கள் கேள்வி எழுப்பின.

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், அதைப் பற்றி பேச இது இடமல்ல, நேரமல்ல. அதுகுறித்து விரைவில் தனியாக பிரஸ் மீட் வைப்போம் என கூறினார்.

இந்த பேச்சுதான் தற்போது சமூக ஊடாங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இன்று மாலை கமல் என்ன ட்வீட் போடப்போகிறார்? எந்த அமைச்சர் இன்று இரவு தூக்கத்தை தொலைக்கப் போகிறார்? என்ற எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here