உடைந்துபோன ‘காக்காமுட்டை’ இயக்குநர்… இதற்கும் அன்புச்செழியன்தான் காரணம்!

0
424

‘காக்காமுட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன் தற்போது தனது அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணம் இல்லாததால், ஸ்க்ரிப்ட் எழுதி தருவது போன்ற சின்ன சின்ன வேலைகளை செய்து தனது அன்றாட வாழ்க்கை நடத்தி வருகிறார். பண கஷ்டத்தால் தான் வாங்கிய சினமா உபகரணங்களையும் விற்றுவிட்டாராம். இதற்கு காரணம் பைனான்சியர் அன்புசெழியன் தான்.

‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி முறையில் 5.5 கோடி தருவதாக ஒப்பந்தம் போட்டுள்ளார். தனியாக சம்பளம் எதுவும் இல்லாமல் லாபத்தில் 40% ஷேர் என்று மணிகண்டனுடன் ஒப்பந்தம் செய்துள்ளர். படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நன்றாக சென்ற நிலையில் தன் 40% பங்கை இயக்குனர் கேட்டிருக்கிறார், ஆனால் படம் ஓடவில்லை என கூறிவிட்டாராம் அன்புச்செழியன். பின்னர் படத்தின் டிவி உரிமை, டிஜிட்டல் உரிமை விற்று அதிக பணம் ஈட்டியுள்ளார் அன்புச்செழியன். இருப்பினும் தற்போதுவரை மணிகண்டனுக்கு தர வேண்டிய காசை கொடுக்கவில்லையாம், முறையான கணக்கும் காட்டவில்லையாம். அதனால் தற்போது மிகவும் கஷ்டப்பட்டடு வருகிறார் இயக்குனர் மணிகண்டன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here