ஆசிஃபாவுக்கு நடந்தது என்ன? உயிரை உறைய வைக்கும் சம்பவம்….!

0
4543

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சினைகளுக்காக தமிழகம் கடந்த இரண்டு வாரங்களாக கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற சூழலில் காஷ்மீரில் நாட்டையே அதிர வைக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. எட்டு வயது சிறுமி ஆசிஃபா எட்டு பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யவும்பட்டுள்ளார்.

ஆசிஃபா யார்?
ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் உள்ளது கசானா என்ற அழகிய கிராமம். ஆசிஃபாவின் குடும்பம் ஏழ்மையான குடும்பம்தான். குதிரை மேய்க்கும் தொழில் அவர்களது பரம்பரைத் தொழிலாக இருக்கிறது. வீட்டிலேயே குதிரை வளர்க்கிறார்கள். கடந்த ஜனவரி 10ம் தேதி ஆசிஃபா தான் செல்லமாக வளர்த்த குதிரையை அருகில் உள்ள குளக்கரைக்கு கூட்டிச் சென்றாள். சில நிமிடத்தில் அங்கே ஆசிஃபா மாயமானாள். குதிரை மட்டும்தான் மேய்ந்து கொண்டிருந்தது.

மக்கள் போராட்டம்:
ஆசிஃபாவை நாட்கணக்கில் தேடிய அவளது பெற்றோர்கள், ஹிராநகர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றினையும் பதிவு செய்துள்ளனர். காவல்துறை புகாரை மட்டும்தான் பதிவு செய்தது. நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்களது அலட்சியப்போக்கை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராடினர். சமூக வலைத்தளங்களில் இச்செய்தி காட்டுத்தீ போல பரவியது.

பிஞ்சின் பிரேதம்:
எட்டு நாட்கள் போலீசார் தொடர்ந்து ஆசிஃபாவை தேடினர். பிறகு அவள் சடலமாகவே கண்டெடுக்கப்பட்டாள். பிரேத பரிசோதனையில் அவள் பல நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, பின் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறியது மருத்துவ அறிக்கை. உடல் முழுவதும் காயங்கள், கீறல்கள், பற்களால் கடிக்கப்பட்டதன் தழும்புகள் காணப்பட்டன. மயக்க மருந்து கொடுக்கப்பட்டதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன. இதுதவிர உடலின் பல இடங்களில் தீக்காயங்கள் இருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here