குஜராத் தேர்தலின் ‘வெற்றி நாயகன்’ ஜிக்னேஷ் மேவானி பற்றிய 5 சுவாரசிய தகவல்கள்!

0
9568

குஜராத்தின் வட்காம் தொகுதியில் தனித்து போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி முக்கிய தலைவராக உருவெடுத்து இருக்கிறார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரை விட இவர் பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். மிகவும் இளம் வயது அரசியல்வாதியாக உருவெடுத்து இருக்கும் இவர் பா.ஜ.க.வுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

குஜராத் தேர்தலின் 'வெற்றி நாயகன்' ஜிக்னேஷ் மேவானி பற்றிய 5 சுவாரசிய தகவல்கள்!

மக்கள் செல்வன்:
இனி குஜராத்தில் நடக்க போகும் பல முக்கிய அரசியல் மாற்றங்களுக்கு இவரும் காரணமாக இருப்பார். இந்த தேர்தல் தான் இவருக்கு முதல் தேர்தலும் கூட இருப்பினும் மக்கள் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு அளித்துள்ளனர்.

குஜராத் தேர்தலின் 'வெற்றி நாயகன்' ஜிக்னேஷ் மேவானி பற்றிய 5 சுவாரசிய தகவல்கள்!

போராட்ட நாயகன்:
முக்கிய தலைவராக உருவாகி இருக்கும் ஜிக்னேஷ் 35 வயது மட்டுமே நிரம்பியவர். சட்டம் படித்த இவர் 2008 ஆம் ஆண்டில் இருந்து தலித் மக்களின் உரிமைக்காக போராட்டங்கள் நடத்தி வருகிறார். டெல்லியில் ரோஹித் வெமுலா மரணம் அடைந்த போதும் இவர் நிறைய போரட்டங்களை நடத்தினார். அந்த போராட்டத்தில் இருந்தே அரசியல் வெளிச்சம் இவர் மீது பட ஆரம்பித்தது.

குஜராத் தேர்தலின் 'வெற்றி நாயகன்' ஜிக்னேஷ் மேவானி பற்றிய 5 சுவாரசிய தகவல்கள்!

பிரமாண்ட கூட்டம்:
பா.ஜ.க தங்கள் அரசியல் லாபாத்திற்காக கொண்டு வந்த வதை தடை சட்டம் தான் இவரையும் வளர்த்தது. குஜராத்தில் பசு இறைச்சி சாப்பிட்டதாக அடிக்கடி சிலர் கொல்லப்படும் சம்பவம் நடந்தேறும். அதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தார். உனாவில் பசு வதை பெயரில் நடந்த மனித கொலைக்கு எதிராக 20,000 தலித் மக்களை கூட்டி பெரிய போரட்டத்தை நடத்தினார்.

குஜராத் தேர்தலின் 'வெற்றி நாயகன்' ஜிக்னேஷ் மேவானி பற்றிய 5 சுவாரசிய தகவல்கள்!

தலைவர் ஆன கதை:
இந்த போரட்டத்தை பெரிய பேரணியாக மாற்றி உனாவில் கொடி ஏற்ற முடிவு செய்தார். இவர்தான் போராட்ட கொடி ஏற்றுவார் என்று எல்லோரும் நினைத்த போது ரோஹித் வெமுலாவின் தாயை கூப்பிட்டு கொடி ஏற்ற வைத்தார். இந்த நிகழ்வுக்கு பின் அவர் இந்தியா முழுக்க பேசப்பட்டார். இதன்பின் குஜராத்தின் முக்கிய தலைவர் ஆனார்.

குஜராத் தேர்தலின் 'வெற்றி நாயகன்' ஜிக்னேஷ் மேவானி பற்றிய 5 சுவாரசிய தகவல்கள்!

வட்கம் வெற்றி:
குஜராத்தின் வட்கம் தொகுதியில் போட்டியிட்ட இவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவே கருதப்பட்டது. தலித் உரிமைகளுக்கான போராளியாக அடையாளம் காணப்பட்ட இந்த ஜிக்னேஷ் மேலானி, வட்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி, 18,150 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றுள்ளார். இந்த வெற்றி குஜராத் அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்பதை நம்பியே ஆக வேண்டும்.

 

இளைஞர்களே…
சட்டசபைத் தேர்தல் களத்தில் இறங்கிய கணமே, அதிரடியாக வெற்றி பெறும் இளைஞர் படையின் அவசியத்தை குஜராத் தேர்தல் இப்போது உணர்த்தியுள்ளது. இந்த வெற்றிதான் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இளைஞர்களுக்கு எனர்ஜி டானிக். உண்மையான போராளிகளான இளைஞர்கள் நினைத்தால் முடியாதது ஒன்றும் இல்லை.

இந்திய அரசியலில் கலக்கும் 6 இளைஞர்கள் இவர்கள்தான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here