முதல்வர் கனவில் மிதந்த நடராஜனை நாடு கடத்திய ஜெயலலிதா!

0
50283

நடராஜன் தமிழ்நாட்டின் முதல்வராக ஆசைப்பட்டதும், அவரை ஜெயலலிதா வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த சம்பவத்தையும் இந்நாளில் தமிழக மக்கள் ரீக்கால் செய்துகொள்ள வேண்டும். வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்த சமயத்தில் டெல்லியிலேயே இருந்தார் நடராஜன். அப்போதைய சமயத்தில் ஜெயலலிதா நடராஜனின் செயல்களை, அவர் விளைவிக்கும் குழப்பங்களை எண்ணி புலம்பிக் கொண்டிருத்த வேளை அது. அப்போது நாவலர் நெடுஞ்செழியன் ஜெ.வின் காதுக்கு ஓர் அதிர்ச்சி செய்தியை கொண்டு வருகிறார். நெடுஞ்செழியனும் நடராஜனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்.

முதல்வர் ஆசை:
அந்த அதிர்ச்சி செய்தி என்னவென்றால், நடராஜன் கட்சிக்குள் தனக்கென தனிக் கூட்டத்தை திரட்டி இருக்கிறார் என்பதுதான். மேலும் நடராசனுக்கு முதல்வர் ஆகும் ஆசை வந்துவிட்டது என்பதையும், முதல்வர் ஆகும் வேளைகளில் நடராஜன் மும்மரமாக இறங்கியுள்ளார் என்பதையும், மேலும் அவர் சோதிடர்களிடம் குறி கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று நெடுஞ்செழியன் பதிவு செய்கிறார்.

தொண்டர்கள் கோஷம்:
அ.தி.மு.க. வென்று ஜெயலிதா ஆட்சிக்கு வந்தாலும், அவரால் முழுநேர முதல்வராக பணியாற்ற முடியாது. அந்த அளவுக்கு அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே தான்தான் டிஃபாக்டோ சி.எம் என சில இடங்களில் நடராஜன் பேசி இருக்கிறார். அதுமட்டுமின்றி சைதாபேட்டை நீதிமன்றத்துக்கு வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த இவரை, உள் ஆட்கள் சிலர் ‘வருங்கால முதல்வர் நடராஜன்’ என கோஷமிட்டு வரவேற்கிறார்கள். இந்த விஷயங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் காதுக்கு போனது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here