மக்கள் மனதில் இடம்பிடிக்க ஜெயலலிதாவைப் போலவே மாறிய 4 பெண்கள்!

0
1493

‘ஜெ. ஜெயலலிதா எனும் நான்’ என்ற வரிகள் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பேசப்படும் ஆளுமையான வாக்கியவரியாக இருக்கும். மிக எளிமையான உடை அணிந்திருந்தாலும் மிக கம்பீரமாக, இரும்புப் பெண்மணியாக மக்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்றிருக்கிறார் ஜெயலலிதா. அவரது மறைவிற்குப் பின்னர், மக்கள் மனதில் இடம்பிடிக்கும் அடுத்த பெண் தலைவராக நாங்கள் இருப்போம் என சிலர் கிளம்பினர். இதற்காக ஜெ.வை போலவே நடை – உடை – பாவனைகளை மாற்றிக்கொண்டனர். இப்படிப்பட்ட வித்தியாசமான 4 பெண்மணிகளை பற்றிதான் இங்கே பார்க்கப் போகிறோம்.

மக்கள் மனதில் இடம்பிடிக்க ஜெயலலிதாவைப் போலவே மாறிய 4 பெண்கள்!

#1 சசிகலா:

ஜெயலலிதா இறந்த பின்பு அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவியையும், தமிழக முதல்வர் பதவியையும் அடைவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார் சசிகலா. மக்களின் மனதில் இடம்பிடிப்பதற்காக ஜெயலலிதாவைப் போலவே தனது நடை – உடை – பாவனைகளை மாற்றிக்கொண்டார். பல அரசியல் கேம்களை விளையாடி டெல்லிக்கே சவால் விட்டார். சில நாட்களில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றார்.

 

மக்கள் மனதில் இடம்பிடிக்க ஜெயலலிதாவைப் போலவே மாறிய 4 பெண்கள்!

#2 தீபா:

ஜெயலலிதா அப்போலோவில் சேர்க்கப்படும் இருக்கும் வரை யாராலும் அறியப்படாத நபராக இருந்த தீபா திடீரென அத்தையை பார்க்க அனுமதி மறுக்கிறார்கள் என அப்போலோ வாசலில் அலறியடித்து பேட்டி கொடுத்தார். ஜெ. மறைந்த பின்பு இவர் மீதும் சிறிது பரிதாப அலை அடித்தது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் சில நூறு பேர் தீபா வீட்டு வாசலில் தஞ்சம் புகுந்தார்கள். கூட்டத்தைக் கண்டதும் கட்சி ஆரம்பித்துவிட்டார். ஜெயலலிதாவைப் போல தனது நடை – உடை – பாவனைகளை மாற்றினார். கட்சிக்குள் குடும்ப பிரச்சினைகள் நுழைய கட்சியும் உடைந்தது, சேர்ந்த கூட்டமும் கலைந்தது.

 

#3 கிருஷ்ணப்பிரியா:

இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்பிரியா அரசியலுக்கு அதிரடி எண்ட்ரீ கொடுத்திருக்கிறார் என்றாலும் ஊடகங்கள் இவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஜெயா டிவியில் மட்டும் அவ்வப்போது இவரது அறிக்கைகள் வாசிக்கப்படும். இவரும் ஜெயலலிதாவைப் போலவே மாறியிருக்கிறார். பார்ப்பதற்கு எண்பதுகளில் இருந்த ஜெயலலிதாவைப் போலவே இருக்கிறார்.

 

#4 அம்ருதா:

இப்போது பெங்களூரில் இருந்து ஜெயலலிதாவின் மகள் எனக் கூறிக்கொண்டு அம்ருதா என்பவர் வந்திருக்கிறார். இவரும் பார்க்க அச்சு அசலாக ஜெயலலிதாவைப் போலவே இருக்கிறார். தன்னை ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்க வேண்டும் என்றும், டி.என்.ஏ. பரிசோதனை செய்ய ஜெ.வின் உடலை தோண்டி எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு கோரினார். ஜெயலலிதா தன்னை 3 மாத குழந்தையிலேயே உறவினரான சைலஜாவிடம் தத்து கொடுத்துவிட்டார் என்று இப்போது மீடியாக்களிடம் கதறிக் கொண்டிருக்கிறார்.

 

இவர்கள் எல்லாம் ஜெயலலிதாவாக மாறுவதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வியில்தான் முடிந்தன. யாராலும் அரசியலில் காலூன்றி நிற்க முடியவில்லை. நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என கூறிக்கொண்டு இன்னும் எத்தனை பேர் வரப் போகிறார்கள் என்பதை போக போகத்தான் தெரிந்துகொள்ள முடியும். பொறுமையாக காத்திருப்போம் மக்களே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here