ஜெயலலிதாவையே வீட்டுச்சிறை வைத்த நடராஜன்: என்ன நடந்தது தெரியுமா?

0
41883

ஒருமுறை ஜெயலலிதாவின் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ஜெயலலிதாவும், சசிகலாவும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தனர். அன்று போயஸ் தோட்டத்திற்குள் சென்ற ஜெயலலிதா அடுத்த 5 மாதங்களுக்கு வெளியில் வரவே இல்லை. பொது நிகழ்ச்சிகள், கூட்டங்கள், கட்சி அலுவலகம், சட்டமன்றம் என எங்கும் அவரை காணமுடியாமல் இருந்தது. அவரை சந்திக்க போயஸ் தோட்டத்திற்கு சென்றவர்களையும் கூட வர சந்திக்கவில்லை.

ஜெயலலிதா கொண்டுவந்த முத்தான 15 திட்டங்கள்... முன்னேறிய தமிழகம்!ஆளே காணோம்:
முற்றிலுமாக தன்னை வெளியுலக தொடர்பில் இருந்து துண்டித்துக்கொண்டு அந்த 5 மாதங்களும் வேதா நிலையத்திற்குள்ளேயே முடங்கியிருந்தார் ஜெயலலிதா. ஒருகட்டத்தில் ஜெயலலிதா இருக்கிறாரா? இல்லையா? என்றே கேள்வி எழுந்துவிட்டது. கட்சியின் நிர்வாகிகள் ஒருவரையும் கூட அவர் சந்திக்கவில்லை. குறைந்தபட்சம் அவர் தனது நிலை குறித்து ஒரு அறிக்கையையும் கூட வெளியிடவில்லை. நடராஜன்தான் ஜெயலலிதாவை வீட்டுச்சிறை வைத்துள்ளார் என வெளிப்படையாகவே பேசத் தொடங்கிவிட்டனர். கட்சிக்குள்ளேயே பலர் பேசினார்கள்.

உண்மை இதுவே:
இந்த நேரத்தில் அரசியல் தந்திரியாக செயல்பட்டார் நடராஜன். திடீரென நாவலர் நெடுஞ்செழியனை நேரில் சென்று சந்தித்தார். அ.தி.மு.க.விற்கு தலைமை தாங்க வேண்டும் என ஜெயலலிதா விரும்புகிறார் என நடராஜன் கூற, சற்று தயங்கினார் நெடுஞ்செழியன். அப்போதே அவரிடம் என்ன ஆனார் ஜெயலலிதா? என கேள்வி எழுப்பினார் நெடுஞ்செழியன். அப்போது கூலாக பதில் சொன்ன நடராஜன், ஜெயலலிதா வதந்திகளை நீங்களும் நம்புகிறீர்களா? அவரை நான் சிறைவைக்க முடியுமா? அவர் இப்போது ஓய்வில் இருக்கிறார். உடல்நலம் குறித்து வெளியே சொல்ல அவரது இமேஜ் தடுக்கிறது. உடல்நிலை சரியானதும் அவர் வெளியில் வருவார் என தெரிவித்தார்.

தி.மு.க. அலறல்:
ஜெயிலலிதா வெளியில் வராத அந்த 5 மாதங்களிலும் அ.தி.மு.க.வை உயிர்ப்புடனே வைத்திருந்தார் நடராஜன். எதையாவது செய்து தி.மு.க.வை அதிர்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என முடிவு செய்தவர், தி.மு.க. அமைச்சரான ஆற்காடு வீராச்சாமி செய்த மோசடிகளை நேரம் பார்த்து அம்பலப்படுத்தினார். ஜெயலலிதாவின் வதந்திகளை தடுத்து நிறுத்தி, தி.மு.க.வை அலற விட்டார் நடராஜன்.

முதல்வர் கனவில் மிதந்த நடராஜனை நாடு கடத்திய ஜெயலலிதா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here