ஆண்களுக்கு ஜாதிக்காய்… பெண்களுக்கு மாசிக்காய்… 40 நாட்களில் குழந்தை வரம் கிடைக்கும்!

0
6802

பண்டைய காலத்தில் வயாகராவாக திகழ்ந்து வந்துள்ள ஜாதிக்காய் ஆண்களின் உடலில் தன்னெழுச்சி உணர்வுகளையும், உயிரணு உற்பத்தியையும் தாறுமாறாக அதிகரிக்கும் வல்லமை கொண்டது. ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் வகைகள் 15% உள்ளது. ஆல்ஃபா ஃபெனைன், பீட்டா ஃபெனைன், மிர்ட்டிசின், எலின்சின் போன்ற வேதிப்பொருட்களும், எண்ணெய்கள் இருகின்றன. இது மன அழுத்தத்தை போக்கி, பாலின உணர்சிகளை தூண்டும் வல்லமை கொண்டது. உயிரணுக்களின் எண்ணிக்கையை கணிசமாக தூண்டவும் வல்லது இந்த ஜாதிக்காய்.

40 நாட்களில் குழந்தை:

ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அதை இடித்து பொடியாக்கி, சுத்தமான பசும்பாலில் கலந்து காய்ச்சி குடிக்க வேண்டும். இதை காலையும் மாலையும் தொடர்ந்து குடித்து வந்தால் சில நாட்களில் ஆண்களின் உயிர்த்துகள் உற்பத்தியும், அதன் திடத்தன்மையும் கிடைக்க ஆரம்பித்துவிடும்.

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய் இவைகளை ஒரே அளவில் எடுத்து, உடலில் போட்டு தூளாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை காலை – மாலை என தினமும் இரண்டு வேளை காய்ச்சி வடிகட்டிய பசும்பாலில் கலந்து தொடர்ந்து நாற்பது நாட்கள் குடித்து வந்தால் ஆண்மை பெருகி, குழந்தை தரும் யோகம் ஏற்படும்.

பெண்களுக்கு மாசிக்காய்:

ஆண்களுக்கு ஜாதிக்காய் வரம் கொடுப்பதைப் போல பெண்களுக்கு மாசிக்காய் ஒரு இயற்கை அருமருந்தாக அமைந்துள்ளது. மாசிக்காய் குறித்து அதிகம் யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படும்போதும், இந்த மாசிக்காயை பொடித்து பசும்பாலில் கலந்து பருகத் தருவார்கள். நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் இதை சாப்பிடுவதால் பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உயிர்த்துகள்கள் 1௦௦% பாதுகாக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here