டாடா குழுமத்தை மிரட்டும் பிரெக்ஸிட்.. கைவிட்டு போகிறதா ஜாகுவார்..!

0
3970

பிரிட்டன் நாட்டின் பிரதமர் தெரசா மே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் கிரே கிளார்க் ஆகியோரை டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா சில வாரங்களுக்கு முன்பு அவசர அவசரமாகச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பிற்கு முக்கியக் காரணம், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரட்டன் வெளியேற உள்ள நிலையில், டீசல் குறித்து முக்கியச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் பிரிட்டன் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் ஜாகுவாப் லேண்டு ரோவர் நிறுவனம் இனி பிரிட்டன் நாட்டில் கார்களைத் தயாரிக்க முடியாத சூழ்நிலையிலும், தொழிற்சாலையை மூடும் நிலையும் உருவாகியுள்ளது.

டாடா குழுமம் இந்தியா மற்றும் உலக நாடுகளில் சுமார் 100க்கும் அதிகமாக நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்து வருகிறது. இந்நிறுவனம் உற்பத்தி, பாதுகாப்பு, ஏரோஸ்பேஸ், சேவை மற்றும் ஸ்டீல் தயாரிப்பு எனப் பல துறைகளில் இயங்கி வருகிறது.

2008ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நலிவடைந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் விற்பனை உரிமையைக் கைப்பற்றியது, அதன் பின்பு இதன் உற்பத்தியை மேம்படுத்த பில்லியன் பவுண்டுக்கும் அதிகமாகத் தொகையை இந்நிறுவனத்தில் டாடா குழுமம் முதலீடு செய்தது.

இதன் மூலம் பிரிட்டன் நாட்டில் தயாரிக்கும் 3இல் ஒரு கார் ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தது.

கடந்த சில மாதங்களாகக் கூட அமெரிக்கா சீனா மீது விதித்துள்ள வரிகளால் இந்நாட்டின் வர்த்தகம் அதிகளவில் பாதிப்படைந்தது. இதனால் ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனத்தின் சீன வர்த்தகம் பாதித்தது. இதோடு ஐரோப்பாவின் டீசல் கொள்கைகளை மூலம் இந்நிறுவனத்தின் உற்பத்தியும் அதிகளவில் குறைந்தது.

இதுகுறித்து ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகத் தலைவர் ரால்ப் சேப்த் கூறுகையில், பிரெக்ஸிட் மூலம் ஜாகுவார் நிறுவனம் வருடத்திற்குச் சுமார் 1.2 பில்லியன் பவுண்ட் அளவிற்கு நஷ்டத்தைச் சந்திக்கும், அனைத்திற்கும் தாண்டி நிறுவனத்தால் தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியுமா என்பதே சந்தேகமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாடா குழுமம் இதுவரை எதுவும் அறிவிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here