ஐடி ஊழியர்களின் சம்பளம் வரலாறு காணாத உயர்வு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..!

0
6061

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் தொடர்ந்து ஊழியர்கள் வெளியேறி வருவது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபுறம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் சூழ்நிலையும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாகக் காக்னிசென்ட் நிறுவனத்தின் 200 ஊழியர்கள் பணிநீக்கம்.

இவ்விரண்டுக்கும் நடுவில் ஒரு பிரிவு ஐடி ஊழியர்களின் சம்பளம் மட்டும் 40 சதவீதம் வரையில் உயர்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?

ஆம், தற்போது இந்திய ஐடி துறையின் தொழில்நுட்ப தேவைகள் முற்றிலும் மாறியுள்ளது, சில வருடங்களுக்கு முன்பு ஜாவா, பைதான் ஆகியவை தெரிந்து இருந்தால் போதும் என்ற ஒரு சூழ்நிலை இருந்தது. ஆனால் இப்போது அனைத்து நிறுவனங்களும் டிஜிட்டல் துறையை நோக்கிய பயணம் செய்யும் காரணத்தால் தொழில்நுட்ப தேவை முற்றிலும் மாறியுள்ளது.

இன்றைய நிலவரப்படி கிளவுட் கம்பியூடிங், டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் திறன்வாய்ந்தவர்களாக இருந்தால் குறைந்தபட்சம் 40-45 சதவீதம் வரையிலான சம்பள உயர்வு உங்களுக்கு நிச்சயம்.

மேலும் தத்தம் துறையில் பொறியாளருக்கு அதிகத் திறன் இருப்பின் நிறுவனத்தின் தேவை பொருத்து 50 சதவீத சம்பள உயர்வு கூடக் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதுமட்டும் அல்லாமல் தற்போது இந்திய ஐடி நிறுவனங்கள் உலகளவில் தொழில்நுட்ப சேவை அளித்து வருகிறது, இந்திய ஐடி நிறுவனங்களின் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் தற்போது டிஜிட்டல் துறையை நோக்கியே பயணம் செய்யும் காரணத்தால் இத்துறையில் திறன்வாய்ந்தவர்களின் தேவை இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய ஐடி நிறுவனங்களில் 2 முதல் 7 வருடம் அனுபவம் வாய்ந்தவர்கள் புதிய தொழில்நுட்பத்தைத் தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கும் காரணத்தால் இப்பிரிவை சேர்ந்தவர்கள் அதிகளவில் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக ஆய்வுகள் கூறுகிறது.

இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் டிசிஎஸ் நிறுவனத்தைத் தவிரப் பிற அனைத்து ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது.

இன்போசிஸ் – 23 சதவீதம்
காக்னிசென்ட் 22.6 சதவீதம்
விப்ரோ – 17.7 சதவீதம்
டிசிஎஸ் – 10.9 சதவீதம் இவை அனைத்தும் ஜூன் காலாண்டு நிலவரம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here