வீடு வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்.. ரியல் எஸ்டேட் துறைக்கு நெருக்கடி..!

0
247

இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான ரியல் எஸ்டேட் பதிவுகள் அனைத்தும் சந்தை விலையை விடவும் குறைவான விலைக்கே பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் மக்கள் அதிகளவிலான பத்திர கொள்முதல் மற்றும் வரி ஏய்ப்புச் செய்து வருகின்றனர். இதுமட்டும் அல்லாமல் வீடு, நிலம் ஆகியவற்றை வாங்கும் போதும் பெரும்பாலானோர் தொகையை வங்கி வாயிலாகப் பரிமாற்றம் செய்யாமல் ரொக்க பணமாகப் பிரிமாற்றம் செய்யப்படுகிறது.

இதன் வாயிலாக மக்கள் மத்தியில் அதிகளவிலான கருப்புப் பணம் புழக்கம் அடைந்து வருகிறது. இத்தகைய கருப்புப் பணத்தைக் கணக்கில் கொண்டும் வரும் முயற்சியில் தான் அனைத்து ரியல் எஸ்டேட் பதிவுகளுக்கும் இரு தரப்பிடம் இருந்து பான் எண், ஆதார் எண் கட்டாயம் பெற்றுக்கொண்ட பின்பே பதிவு செய்யப்படுகிறது. இந்தக் கண்டிப்பான சூழ்நிலையில் ஒரு படிக்கு அதிகமாகச் சென்றுள்ளது டெல்லி வருமான வரித்துறை.

டெல்லி வருமான வரித்துறை ரியல் எஸ்டேட் பரிமாற்றம் குறித்துப் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி டெல்லியில் எந்தொரு இடத்தில் சொத்து விற்பனை செய்யப்பட்டாலும் அவை வங்கி வாயிலாக வர வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து, 20000 ரூபாய்க்கு அதிகமாக ரொக்க பரிமாற்றம் செய்யப்பட்டால் டெல்லி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும் எனத் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் எந்தொரு ரியல் எஸ்டேட் வர்த்தகத்திலும் 20000 ரூபாய்க்கும் அதிகமான ரொக்க பணமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டால் இரு வருமான வரித்துறையின் நோட்டீஸ் பெற வேண்டிய நிலை உருவாகும்.

வருமான வரித்துறையின் நோட்டீஸ் ஒரு முறை வந்தால் தொடர்ந்து நம்முடைய கணக்குக் கண்காணிப்பில் வைக்கப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். தற்போது வருமான வரித்துறை அதிநவீன தொழில்நுட்பத்தைப் பெரிய அளவில் பயன்படுத்த துவங்கியுள்ள நிலையில் ஒரு கணக்கை கட்டம்கட்டி கண்காணிப்பது எளிதான காரியம்.

இதுமட்டும் அல்லாமல் டெல்லி வருமான வரித்துறை டெல்லியில் உள்ல 21 சப் ரிஜிஸ்தார் அலுவலகத்திற்குச் சென்று 2015 முதல் 2018 வரையில் நடந்த அனைத்து பதிவுகளையும் ஆய்வு செய்து தகவல்களைச் சேகரித்துள்ளது. அதில் எந்தெந்த பதிவுகள் 20000 ரூபாய் ரொக்கத்திற்கும் அதிகமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் தகவல் சேகரித்துள்ளது.

இப்புதிய மாற்றத்தை டெல்லி வருமான வரித்துறை பிரிவு 269எஸ்எஸ் படி ரியல் எஸ்டேட் துறை மாற்றங்கள் 2015 கீழ் அமலாக்கம் செய்துள்ளது.

மத்திய நேரடி வரி அமைப்பின் அறிவிப்பு படி ஜூன் 1, 2015 முதல் எந்தொரு ரியல் எஸ்டேட் பரிமாற்றமும் 20000 ரூபாய்க்குத் தாண்டினால் அவை செக் அல்லது RTGS அல்லது மின்னணு பரிமாற்றங்கள் வாயிலாகத் தான் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.

இது ஏற்கனவே நறைமுறையில் இருக்கும் நிலையில் 2015-2018 வரையிலான காலத்தில் இதை மீறியவர்கள் மீதும் இனி மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் பிற வருமான வரித்துறை அலுவலகங்களும் இதை நடைமுறைப்படுத்த அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டால் ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் கருப்புப் பணம் அதிகளவில் குறையும். இதனால் விலை அளவுகளும் அதிகளவில் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here