ஜெருசலேமை தலைநகரமாக அங்கீகரித்த டிரம்ப்… கொதித்து எழுந்த பாலஸ்தீனம்!

0
161

இஸ்ரேல் நாட்டில் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு எதிராக பாலஸ்தீன அதிபர் முகபது அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம்:

1967-ஆம் ஆண்டு யுத்ததின் போது கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது. ஆனால் உலக நாடுகள் இதனை ஏற்றக்கொள்ளவில்லை. இதனையடுத்து இஸ்ரேல் தலைநகராக டெல் அவிவ் இருந்து வந்தது. இந்நிலையில் இஸ்ரேல் தமது நாட்டின் தலைநகரை மாற்றுவதாக அறிவித்தது. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் நட்பு நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்புகளை மீறி இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக வெள்ளை மாளிகையில் அறிவித்தார். டெல் அவிவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும் ஜெருசலேமுக்கு மாற்றப் போவதாக அறிவத்தார். டிரம்ப்பின் அறிவிப்புக்கு துருக்கி, செளதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பாலஸ்தீன அதிபர் கண்டனம்:

இந்த செயலக்கு பாலஸ்தீன அதிபர் முகபது அப்பாஸ் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஜெருசலேம் எங்களுக்கு தான் சொந்தம் என்று கூறியுள்ளார். பாலஸ்தீனம் ஜெருசலேம் நகரத்தின் கிழக்கு பகுதிக்கு பல நாட்களாக உரிமை கோரி வருகிறது. இந்த நிலையில் பாலஸ்தீன அதிபர் இதுகுறித்தும் ஜெருசலேம் எப்போதும் எங்களுக்குத்தான். நாங்கள் எங்களின் உரிமையை நிலைநாட்டுவோம். மீண்டும் ஒருநாள் ஜெருசலேம் எங்களுக்கு தலைநகராக கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here