சில மாதங்கள் முன்பு வரையில் இந்தியாவின் சூப்பர் ஹாட் ஜோடி என்றால் விராத் கோலி – அனுஷ்கா தான் ஆனா இப்போது பிரியங்கா – நிக், தீபிகா – ரன்வீர் எனப் பலர் வந்துவிட்டனர்.
சரி விஷயத்திற்கு வருவோம் கடந்த ஆண்டு டிசம்பர் 11ந் தேதி விராத் கோலி மற்றும் அனுஷ்கா ஆகியோருக்குத் திருமணம் நடைபெற்ற நிலையில் நடிகை அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் அனுஷ்கா சர்மா தனது வயிற்றை மறைத்தபடியும், கேமரா மேன்களையும் அருகில் நெருங்க விடாதபடி பாதுகாவலர்களையும் உடன் பத்திரமாக மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளியில் அனுஷ்கா சர்மா அழைத்து வந்திருந்தார்.
இதுமட்டும் அல்லாமல் ரசிகர்கள் யாருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அனுஷ்கா மறுத்துவிட்டார். வழக்கமாக விமான நிலையத்தில் புகைப்படம் எடுக்க வரும் ரசிகர்களுடன் ஆர்வத்துடன் அனுஷ்கா செல்பி எடுத்துக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. அனுஷ்காவின் இந்தச் செயல்கள் மூலம் பலரும் அவர் கர்ப்பமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு விழாவில் பங்கேற்றபோது, அனுஷ்காவிடம் கர்ப்பம் குறித்துக் கேள்வி கேட்டபோது, ‘ நீங்க என்ன வேணும்னாலும் எழுதலாம். அது படித்து விட்டு நான் சிறிது விட்டு போய் விடுவேன். ஆனால் சில நாட்களிலேயே நீங்கள் பொய்யை பரப்புவது மக்களுக்குத் தெரிந்துவிடும். அப்போது நீங்கள் முட்டாள் ஆகிவிடுவீர்கள் மீடியாக்களிடம் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
ஏற்கனவே ஒரு முறை அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. அனுஷ்காவின் இந்தப் பதில் மூலம் இவர் தற்போது கர்ப்பமாக இல்லை என்பது உறுதியாகியுள்ளது.