இது இருளர் என்ற இருண்ட சமுதாயத்தின் கண்ணீர் கதை!

0
697

இருளர் சமுதாயம் என்றொரு சமுதாயம் இருக்கின்றது. தமிழ் நாட்டில் கண்டும் காணாமல் இருக்கும் பல பழங்குடி மக்களில் இவர்களும் உண்டு.

இருளர் சமுதாயம் தஞ்சாவூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் கோவை ஆகிய இடங்களில் வாழ்ந்து வருகிறார்கள். சாதிப்பட்டியலில் மிகவும் தாழ்த்தப்பட்ட கடை நிலை சமூகம் இது. இவர்களில் வாழ்க்கை நிலை மிகவும் கவலைக்குரியது. அதனைப் பற்றி விரிவாக இங்கு காண்போம்.

மொழி :

அவர்கள் பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு பேசுபவர்கள். இவர்களின் மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. இவர்களின் கலாச்சாரமும் சற்று வித்தியாசமானது இன்று நாகரீகமானவர்களிடம் பெருகி வரும் லிவ் இன் கலாசாரம் அவர்களுடைய பண்பாடு. ஆனால் சற்று வித்தியாசம். ஒரு வருடத்திற்கு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வார்கள் அவர்க்ளுக்குள் எந்த வித கருத்து வெறுபாடும் வரவில்லையென்றால் பின்பு மணம் செய்து கொள்வார்கள்.

ஆடல் பாடல் :

அவரவர் வேலை முடிந்து ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து ஆடிப் பாடி அன்றைய மாலையை கொண்டாடுவார்கள். அவர்களுக்கென அழகான பாடல்களும் இருக்கிறது.

வீடு :

அவர்களுக்கு வீடு அரசு கட்டிக் கொடுத்திருக்கிறது என்று சொன்னாலும்ம் எல்லாமே பெயரளிவில்தான். நீங்களே அவர்களின் வீடு இருக்கும் நிலைமைகளை பாருங்கள்.

அவர்களது தொழில் :

அவர்களின் தொழில் பாம்பு பிடித்தல். பாம்பு பிடித்து பண்ணைகளுக்கு கொடுத்தால் அதில் வரும் வருமானம் அவ்ர்களுக்கு போதுமானதாக இருந்தது. பாம்பு தவிர வயல்களில் பயிர்களிய நாசமாக்கும் எலி, முயல் மற்றும் உடும்பு ஆமைகளையும் பிடித்து தௌர்ம் வேலையை செய்தார்கள். ஆனால் பாம்பு பிடிப்பதை அரசு தடை செய்தத்தும், அவர்களின் வாழ்வாதாரம் பாதித்தது.

இன்று அவர்களின் நிலைமை?

இவர்களுக்கு போதிய படிப்பறிவு இல்லை. இவர்களின் சமுதாயத்தில் படித்தவர்கள் என பெரிதாக யாருமில்லை என்பது மிகவும் துயரமானது. இதனால் இவர்களின் அறியாமையை பயன்படுத்தி, செங்கல் சூளை மற்றும் அரிசி ஆலைகளில் அவர்களை மிகக் குறைந்த சம்பளத்தில் கொத்தடிமைகளாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அவர்களுக்கென ரேஷன் கார்டு, ஓட்டுரிமை என எதுவுமில்லை . எனவே அவர்களை வலுக்கட்டாயமாக்க செங்கல் சூளையில் வேலை செய்ய ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் இரவில் அவர்களை செங்கள் சூளையிலேயே தூங்கச் சொல்வதால் குழந்தைகளை விஷ ஜந்துக்களிடமிருந்து காப்பாற்றுவது மிகவும் துயரமாக இருக்கிறது என்று அவர்கள் கவலையுடன் சொல்கின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் தாங்கள் படிப்பறிவு இல்லாமல் இருப்பதால்தான். ஆகவே தங்களுக்கு படிப்பு செல்லித் தர வேண்டியது அரசின் கடமை என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

எவர்களுக்கு முக்கியமாக படிப்பு தேவை? எந்த இத பின்புலமும் இல்லாத, அடிப்படை வசதிகள் கூட இல்லாத இவர்கள் போன்ற சமுதாயத்திற்குதான் முதலில் படிப்பறிவு வேண்டும். பணம் மேலும் பணமுள்ளவர்களிடம்தன சேர்கிறது. அப்படித்தான் படிப்பும் கூட .. படிப்பறிவு அதிகம் படித்தவர்களிடம்தான் சென்றடைகின்றது . எவ்ருக்கு முக்கியமாக தேவை என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here