ஐ.பி.எல். ஏலம்: எந்த அணியில் எந்தெந்த வீரர்கள்?

0
303

சென்னை  சூர்ப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மீண்டும் களத்திற்கு திரும்பி இருப்பதால் இப்போதே போட்டியில் சூடு கூடியிருக்கிறது. எந்த அணிக்கு எந்தந்த வீரர்கள் செல்வார்கள் என்பது எதிர்பார்ப்பபை ஏற்படுத்தியுள்ளது.

அணி வீரர்களுக்காக இந்த ஏலம் பெங்களூரில் நடக்கவுள்ளது. ஒவ்வொரு அணிக்குமான பட்ஜெட் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அணிகளின் பட்ஜெட் 80 கோடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

ஐ.பி.எல். ஏலம்: எந்த அணியில் எந்தெந்த வீரர்கள்?

அதிகபட்சமாக வீரர்களுக்கு 15 கோடி வரை இந்த புதிய முறையில் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அணியின் பட்ஜெட் இரண்டு கோடி ரூபாய் உயர்த்தப்படும். எல்லா அணிகளும் இந்த விருப்ப பட்டியலை கொடுத்துவிட்டது.

ரிஷாப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரை டெல்லி அணி கேட்டு இருக்கிறது. சுனில் நரேன், கிறிஸ் லைன் ஆகியோர் கொல்கத்தா அணியால் எடுக்கப்பட இருக்கிறார்கள். டேவிட் வார்னர், தீபக் ஹூடா ஆகியோர் சன் ரைசர்ஸ் அணியால் எடுக்கப்பட உள்ளனர்.

ஐ.பி.எல். ஏலம்: எந்த அணியில் எந்தெந்த வீரர்கள்?

டோணி, ஜடேஜா, ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் செல்கிறார்கள். கோஹ்லி, சாஹல், டி வில்லியர்ஸ் பெங்களூர் அணிக்கு திரும்புகிறார்கள். ஸ்டிவ் ஸ்மித் ராஜஸ்தான் அணிக்கு திரும்புகிறார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மட்டும் எந்த வீரரையும் மீண்டும் அணிக்கு திரும்ப எடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ரோஹித், பாண்டியா மும்பை அணிக்கு செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here