ஐபிஎல் வரலாற்றில் இது சாத்தியமா..?

0
7954

ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. அதற்காக அணிகள் எல்லாம் தீவிரமாக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். தற்போது இந்தாண்டு 11வது ஐபிஎல் மிகவும் ரசிகர் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஐபிஎல் வரலாற்றில் முதன்முதலாக இது நிறைவேறுமா..?

சென்னை மற்றும் ராஜஸ்தான்:

சூதாட்ட புகாரினால் கடந்த இரண்டு ஆண்டுகள் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி விளையாட தடை விதிக்கப்பட்டு. தற்போது மீண்டும் தனது திறமையை நிருபிக்க சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் களமிறங்க உள்ளனர். இதில் தோணி சுரேஷ் ரைனா ஜடேஜா ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலரும் உள்ளதால் இந்தாண்டு சென்னை ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பாப்பு நிலவுகிறது.

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகள் முடிந்து 11 ஆண்டில் நடைப்பெற உள்ளது. இந்நிலையில் இதுவரை இல்லாத ஒன்று ஐபிஎல் கிரிக்கெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் வரலாற்றில் முதன்முதலாக இது நிறைவேறுமா..?

கேப்டன்கள்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணின் தலைவராக தல தோணி உள்ளார். டெல்லி டார்டெவில்ஸ் அணியின் கேப்டன் கௌதம் கம்பீர், பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணின் கேப்படன் விராட் கோலி, கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக், மும்பை இன்டியன்ஸ் அணியின் கேப்படன் ரோஹித் ஷர்மா, ராஜஸ்தான் அணியின் கேப்படன் ரஹானே மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வினன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் வரலாற்றில் முதன்முதலாக இது நிறைவேறுமா..?

நீக்கம்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித்தும் துணை கேப்டன் பதவியிலிருந்து வார்னரும் நீக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ராஜஸ்தான் அணியில் இருந்த ஸ்மித்தை நீக்கிவிட்டு ரஹானேவை கேப்டனாக நியமித்துள்ளது அந்த அணி.

தற்போது ஹைதராபாத் அணியும் வார்னரை நீக்கிவிட்டு தவானை கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளது. அப்படி தவான் நியமிக்கப்பட்டால், ஐபிஎல் உள்ள எட்டு அணிகளுக்கும் முதன் முதலாக இந்திய வீரர்கள் கேப்டன்களாக செயல்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here