இந்த வருஷம் ஐபிஎல் இந்தியாவில் தான்.. மார்ச் 23 முதல் கொண்டாட்டம்..!

0
484

இந்த ஆண்டுப் பொதுத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்தியாவில் ஐபிஎல் நடத்துவது என்பது சாதாரணக் காரியம் இல்லை, இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் வைத்துக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியது.

ஆனால் ஐபிஎல் நிர்வாகம் வெளிநாட்டில் வைத்தால் வசூல், வருமானம் ஆகியவை அதிகளவில் குறைவது மட்டும் அல்லாமல் ஐபிஎல் ரசிகர்கள் சோகம் அடைந்துவிடுவார்கள் எனக் கூறியது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள நிர்வாக அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில் ஐபிஎல் 2019 இந்தியாவில் தான் நடக்கும் என அறிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் டெல்லியின் இதுகுறித்து ஆலோசனை செய்ய அணித் தலைவர்கள், நிர்வாக அமைப்பு ஆகியவை விரைவில் கூடி ஆலோசனை செய்ய உள்ளது.

மேலும் போட்டிகள் எந்தெந்த இடத்தில் நடக்க உள்ளது, அதற்கு மாநில, மத்திய அரசுகள் எவ்வாறு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதற்கான அனைத்து முடிவுகளையும் நாளைய கூட்டத்தில் எடுக்கப்படும் எனப் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் இந்த ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23 ஆம் தேதி துவங்கும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here