ஆன்லைன் ஷாப்பிங் துறையில் இறங்கும் இன்ஸ்டாகிராம்..!

0
3158

உலகின் முன்னணி சமுக வலைத்தளம் மற்றும் போட்டோ ஷேரிங் நிறுவனமான இன்ஸ்டாகிராம், தனது பயன்பாட்டாளர்களுக்குக் கூடுதல் சேவை அளிக்கும் விதிகமா ஆன்லைன் ஷாப்பிங் சேவையை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

இப்புதிய சேவைக் கூடிய விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் எனத் திட்டமிட்டு இதற்கான பணிகளை அதிவேகமாகச் செய்து வருகிறது.

மேலும் இதற்காகத் தனியாக ஒரு செயலியை தயாரிக்க உள்ளதாகவும், அதற்கு IG ஷாப்பிங் எனப் பெயர் வைத்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இத்தளத்தில் விற்பனையாளர்கள் பதிவிடும் பொருட்களை இன்ஸ்டாகிராம் பயனர்கள் வாங்கும் விதமாக அமைய உள்ளது.

ஆனால் இதை முழுமையாக ஏற்காத இன்ஸ்டாகிராம், தற்போதும் ஷாப்பிங் சேவையில் பணியாற்றி வருகிறோம், ஆனால் இதற்காகத் தனிப்பட்ட செயலியை அறிமுகம் செய்யப்போகிறதா என்பது தெரியாது என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

தற்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் தற்போது 25 மில்லியன் நிறுவனங்கள் கணக்கை வைத்துள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருக்கும் 5இல் 4 வாடிக்கையாளர்கள் ஒரு நிறுவனத்தைப் பாலோ செய்கிறார்கள்.

ஆகவே இதை வைத்து வர்த்தகம் மற்றும் வருமானத்தை ஈர்க்கும் முயற்சியில் தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here