36 வருடம் பழைய பாட்டு தான் இங்கேமி இங்மேமி காவாலே பாட்டு.. என்றென்றும் இளையராஜா..!

0
735

அர்ஜுன் ரெட்டி திரைப்படப் புகழ் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகியுள்ள கீதா கோவிந்தம் திரைப்படத்தில் இங்கேமி இங்மேமி காவாலே என்னும் பாட்டு வெளியான சில நாட்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்து மட்டும் அல்லாமல் டோலிவுட் உலகில் வைரலானது.

இந்தப் பாட்டு டோலிவுட்-ஐ தாண்டி தமிழ், மலையாளம், கன்னட திரையுலகிலும் பட்டையைக் கிளப்பியுள்ளது.

Telugu song copied😂 from Tamil old Film😂😂 Illayaraja is such a legendary composer that his work inspires musicians even 3 decades later😎…Closely listen to both the tracks and see where the inspiration for inkem kaavali(2018) came from. #illayaraja #rajaForLife.😍😘

Srinivasa Prabhu यांनी वर पोस्ट केले शुक्रवार, ३ ऑगस्ट, २०१८

இந்நிலையில் இசை ரசிகர்கள் மத்தியில் இந்தப் பாட்டு தொடர்ந்து அசைபோட, இந்தப் பாட்டு இளையராஜா-வின் இசையைப் போலவே இருக்கிறது எனக் கருத்து இருந்தது.

இதனை முழுமையாக இசை ஆர்வலர்கள் ஆய்வு செய்த போது 1982ஆம் ஆண்டுக் கோழி கூவுது படத்தில் பூவே இளைய பூவே பாடலின் மத்தியில் வரும் ஒரு பகுதியை முதன்மைப்படுத்தி இக்கேமி இக்மேமி காவாலே பாடல் உருவாகியுள்ளது தெரிகிறது.

36 வருடங்களுக்குப் பின் இளையராஜா-வின் டிரென்டில் இருப்பது ராஜா சாருக்கும் சரி, அவர்களது ரசிகர்களுக்கும் ஒரு பெருமையாகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here