இந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 347ஆக உயர்வு

0
1939

ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்தோனேசியாவில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இப்பகுதியில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்தப் பயங்கர நிலநடுக்கத்தால் இந்தோனேசியாவில் சுமார் 347 பேர் இறந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லம்போக் தீவுகளில் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால், பல பகுதிகளில் உள்ள கட்டடங்கள், வீடுகள் இடிந்தன. இந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 347 ஆக அதிகரித்துள்ளது. அதில், 1,400 க்கும் அதிகமானோர் காயமடைந்தும் 1,லட்சத்து 65, ஆயிரம் பேர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here