4.5 வருடத்தில் மோடி செய்தது இதுதான்..!

0
354

இந்திய பிரதமராக மோடி தலைமையிலான பிஜேபி அரசு கடந்த 4.5 வருடமாக ஆட்சி செய்து வருகிறது. இக்காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது எனப் பிரச்சாரம் செய்யப்பட்டாலும் மக்களின் வாழ்வியல் இந்த 4.5 வருட காலத்தில் மோசமான நிலையைத் தான் அடைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 4.5 வருடத்தில் இந்தியாவின் கடன் அளவு 50 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொதுத்தேர்தல் நெருங்கி வரும் இத்தகைய காலகட்டத்தில் இந்தியாவின் கடன் அளவு குறித்த தகவல் நாட்டு மக்கள் மத்தியில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இது மோடியின் வெற்றிக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 4.5 வருட காலத்தில் இந்தியாவின் கடன் அளவு 49 சதவீதம் வரையில் உயர்ந்து சுமார் 82 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என 8வது அரசு தரவு அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

அரசு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் செப்டம்பர் 2018 வரையிலான காலத்தில் நாட்டின் மொத்த கடன் அளவு 82,03,253 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது ஜூன் 2014 காலத்தில் அதாவது மோடி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் நாட்டின் மொத்த கடன் அளவு 54,90,763 கோடி ரூபாயாக இருந்தது.

இக்காலகட்டத்தில் நாட்டின் மொத்த பொதுக் கடன் அளவு 51.7 சதவீதம் வரையில் உயர்ந்து 48 லட்சம் கோடியில் இருந்து 73 லட்சம் கோடி ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here