8 வருடத்தில் முதல் முறையாக அமெரிக்காவில் இந்தியர்கள் எண்ணிக்கை சரிவு..!

0
4393

அமெரிக்காவில் கடந்த 8 வருடத்தில் முதல் முறையாக இந்தியர்களின் வருகை எண்ணிக்கை குறைந்துள்ளது. 2017ஆம் ஆண்டில் அமெரிக்கா நாட்டிற்கு வந்த இந்தியர்கள் எண்ணிக்கை 11.14 லட்சமாக இருக்கிறது. இந்நிலையில் முந்தைய வருடத்தை விடவும் 5 சதவீதம் குறைந்தது. 2016ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 11.72 லட்சமாக உள்ளது.

இதுகுறித்த தகவல்களை அமெரிக்காவின் தேசிய சுற்றுலா மற்றும் வர்த்தக அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தற்போது அதிகளவிலான விசா கட்டுப்பாடுகளை விதித்து வரும் காரணத்தால், உலக நாட்டு மக்கள் அமெரிக்காவிற்கு வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் இந்தியர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் டிரம்ப் அரசு அறிவிப்புகளால் ஏற்பட்ட பாதிப்புகள் தெரியக் கூடாது என்பதற்காக இத்தகைய தகவல்களை வெளியிட வேண்டாம் அரசு கூறியுள்ளது என அமெரிக்காவின் தேசிய சுற்றுலா மற்றும் வர்த்தக அலுவலகம் தெரிவித்துள்ளது.

2009ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 5.5 லட்சமாக இருந்து இது முந்தைய ஆண்டை விட 8 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here