10 வருடத்தில் வரலாற்று வெற்றிக்கண்ட இந்தியா.. நியூசிலாந்து மண்ணில் புதிய சாதனை..!

0
734

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தொடர்ந்து வெற்றிகண்ட நிலையில் தற்போது நியூசிலாந்து ஒரு நாள் போட்டி தொடை விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் பட்டையைக் கிளப்பிய இந்தியா 3வது போட்டியை இன்று எதிர்கொண்டு மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது.

ஒருநாள் போட்டி கொண்ட இந்தத் தொடரில் முதல் 3 போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் தொடரை முழுமையாக வெற்றி அடைந்துள்ளது இந்தியா. 2009ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

தோனிக்கு அடுத்தாக இந்திய அணியை ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து மண்ணில் வெற்றி கோப்பையைப் பெற்றது விராத் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

3வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 10 விக்கெட்களையும் இழந்து 243 ரன்களை எடுத்தது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன்ராஸ் டெய்லர் 93 ரன்களும், லேதம் 51 ரன்களும் அடித்தனர்.

இந்திய அணியில் சிறப்பாகப் பந்து வீசிய ஷமி 3 விக்கெட்களும், புவனேஷ்வர் குமார், சஹல், ஹர்டிக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர் நியூசிலாந்து அணியின் விக்கெட்களைத் துவம்சம் செய்தனர்.

அதன் பின்னர், களமிறங்கிய இந்திய அணி, 3 விக்கெட் மட்டுமே இழந்து 245 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

ரோஹித் ஷர்மா 62 ரன்களும், கேப்டன் விராட் கோலி 60 ரன்களும் விளாசினர்.இந்த வெற்றியை தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என வென்று சாதனை படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here