S400 ஒப்பந்தத்தின் விளைவுகளை இந்தியா விரைவில் தெரிந்துகொள்ளும்.. டிரம்ப் அதிரடி..!

0
2550

ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் வைத்துக்கொண்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்த பின்னரும், சில நாட்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடந்த முக்கியமான நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் சந்தித்துக்கொண்டு 5 எஸ்400 ஏவுகணைகளைப் பெற சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் புதன்கிழமை பேசிய போது CAATSA விதிகளின் படி தடை விதிப்பது குறித்து இந்தியா விரைவில் தெரிந்துகொள்ளும் எனக் கூறியுள்ளார். இதுமட்டும் அல்லாமல் நீங்கள் நினைப்பதை விடவும் விரைவாக இந்தியாவிற்கு அமெரிக்கா இதைப் பற்றிப் புரிய வைக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நட்பு நாடுகள் ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் நாடுகளிடம் ஆயுதங்களை வாங்கினால் தத்தம் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்பதே CAATSA சட்ட திருத்தம்.

இதுபற்றி டெல்லியில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில் CAATSA விதிகள் மிகவும் குறுகிய பார்வை கொண்டது. தற்போதைய நிலவரத்தின் படி அமெரிக்கா ரஷ்யா மீது தான் அதிகத் தடை விதிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. இதனால் இந்தியாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் அளவிற்குப் பெரிய பாதிப்புகள் இருக்காது எனத் தெரிகிறது.

ஆனால் இதற்கான முடிவுகளை அனைத்தும் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் கையில் தான் இருக்கிறது என்பதால் அனைத்தையும் பொறுமையுடன் காத்திருந்து தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.

Donald Trump

தற்போது அமெரிக்கா ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் தடையால் இந்நாட்டு உலகின் எந்தொரு நாடு உடனும் வர்த்தகம் செய்ய முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தத் தடையால் ஈரான் நட்டின் அண்டை நாடுகளுடன் கூடவும் வர்த்தகம் செய்ய முடியாத நிலையில் தான் ஈரான் உள்ளது.

சுருக்கமாகச் சொன்னால் அமெரிக்கா ஈரான் நாட்டின் மீதுள்ள தடையை நீக்கினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாதியாகக் குறையும். இந்நாட்டில் எண்ணெய் வளம் மிகவும் அதிகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here