இலக்கை நிர்ணயித்த ஆஸி.. விரோத் கோலி என்ன செய்யப்போகிறார்..!

0
852

இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகளுக்க இடையே நடந்து வரும் ஒரு நாள் போட்டி தொடரின் கடைசிப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிப்பெற்றுக் கடைசிப் போட்டியை இன்று வாழ்வா சாவா என்ற கணக்கில் எதிர்கொள்ளக் காத்திருக்கிறது.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்யத் தேர்வு செய்த நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் பேட் செய்யத் துவங்கியது.

ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் முடிவில் 10 விக்கெட்களையும் இழந்து 230 ரன்களை எடுத்துள்ளது. 231 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

ஆஸ்திரேலியா அணியில் அதிகப்படியாகப் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 58 ரன்களையும், மார்ஷ் 39 ரன்களையும், உஸ்மான் காவாஜா 34 ரன்களையும் எடுத்து அவுட் ஆகியுள்ளனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினாலும் அணியின் ரன் 230 ஐ எட்டியுள்ளது.

டெஸ்ட் தொடரை வரலாறு காணாத வகையில் விராத் கோலி தலைமையிலான அணி வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஒரு நாள் போட்டி தொடரையும் வெற்றிபெற வேண்டும் என எதிர்பார்ப்புடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாகத் தமிழக வீரர் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் முதல் முறையாகச் சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here