250 ரன்களுக்கு 9 விக்கெட்.. மோசமாக ஆடிய முரளி விஜய்..!

0
134

விராத் கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் விளையாடி இரண்டு டெஸ்ட் டூர்களிலும் மோசமான தோல்வியைச் சந்தித்தது. தென் ஆப்பிரிக்கா அணியுடன் விளையாடிய 3 டெஸ்ட் போட்டியில் இந்தியா 1 மேட்சில் மட்டுமே வெற்றிபெற்றது, அதேபோல் இங்கிலாந்து அணியுடன் விளையாடிய 5 போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே இந்தியா வெற்றிபெற்றது.

இந்நிலையில் விராக் கோலி தலைமையிலான அணி தற்போது ஆஸ்திரேலியா டூர்-ஐ வெற்றி அடைந்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் இன்று முதல் போட்டியில் களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் நாளிலேயே மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

போட்டிக்குச் செல்லும் முன் இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா சுமார் 44 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளது. இதில் 5 போட்டிகளில் மட்டும் தான் இந்தியா வெற்றி அடைந்துள்ளது. மேலும் 70 வருடங்களில் ஆஸ்திரேலியாவில் நடந்த 11 டூரில் இந்தியா 2 டூரில் மட்டும் டிரா செய்துள்ளது.

அவை அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டு 4 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியின் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலையில் அடிலைய்டு ஓவல் மைதானத்தில் நடந்தது. முதல் போட்டியின் முதல் நாள் முடிவில் வெறும் 250 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்த மோசமான நிலையில் உள்ளது இந்திய அணி.

முதல் போட்டியில் ஒப்பனிங் இறங்கிய கேஎல் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோர் மோசமான நிலையில் அவுட் ஆனார்கள். 2வது ஒவரில் 3 ரன் மட்டுமே எடுத்திருந்த போது ஹேசில்வுட் பவுலிங்-இல் ராகுல் ஆவுட் ஆனார்.

இதைதொர்ந்து தமிழ்நாட்டு பேட்ஸ்மேன் ஆன முரளி விஜய், முந்தைய போட்டியில் சென்சூரி அடித்த நிலையில் தனது டெஸ்ட் ஆட்டம் தொடருமா இல்லையா என்பதை உறுதி செய்யும் போட்டியாக இது இருந்த நிலையில் 7வது ஒவரிலேயே 15 ரன் மட்டுமே இந்திய அணி எடுத்திருந்த நிலையில் 11 ரன்களில் அவுட் ஆனார் முரளி விஜய்.

இதில் அதிர்ச்சி அடைந்த கேப்டன் விராத் கோலி, களமிறங்கினார். இந்த மைதானத்தில் 3 சென்சூரி அடித்த கோலி எதிர்பாராத விதமாக வெறும் 3 ரன்களில் அவுட் ஆனார்.

இதைத் தொடர்ந்து ரகானே 13 ரன்களிலும், ரோஹித் சர்மா 37 ரன்களிலும், ரிஷாப் பன்ட் 25, அஸ்விந் 25, இஷாந்த் சர்மா 4, சமி 6 ரன்கள் எனத் தொடர்ந்து படபடவென அவுட் ஆகினர்.

ஆனால் 3வதாக இறங்கிய புஜாரா நிதானமாக விளையாடி 123 ரன்களை எடுத்து போட்டியின் முடிவில் ரன் அவுட் ஆகினார். இன்றைய ஆட்டத்தின் முடிவில் 250 ரன்கள் எடுத்து 9 விக்கெட் இழப்பில் ஆட்டம் முடிந்தது.

இன்றைய ஆட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முரளி விஜய் மற்றும் அஸ்வின் ஆகிய இருவருமே மோசமான ஆட்டத்தை ஆடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here