சர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..?

0
3610

2018ஆம் ஆண்டுக்கான உலக நாடுகளின் பொருளாதாரப் போட்டுத்திறன் குறியீட்டு பட்டியல் வெளியாகியுள்ளது. இப்பட்டியலில் வழக்கம் போல் அமெரிக்கா முதல் இடத்தைப் பிடித்துள்ள நிலையில் கடந்த ஆண்டை விடவும் இந்தியா 5 இடங்கள் முன்னேறி இந்த வருடம் 58 வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த உலகளாவிய போட்டுத்திறன் அறிக்கையில் 62.0 மதிப்பெண்ணுடன் இந்தியா 58-வது இடத்தைப்பிடித்தது.

india-flag

சுமார் 140 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஜப்பான், நெதர்லாந்து, ஹாங்காங், இங்கிலாந்து, சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகள் முதல் 10 இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அண்டை நாடான சீனா இப்பட்டியலில் 28-வது இடத்தைப் பெற்றுள்ளது.

மேலும் தற்போது உலகப் பொருளாதாரத்தில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரங்களில், சீனா 72.6 புள்ளிகளுடன் 28 வது இடத்திலும் , ரஷ்யா 65.6 புள்ளிகளுடன் 43 வது இடத்திலும், இந்தியா 62 புள்ளிகளுடன் 58வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 60.8 புள்ளிகளுடன் 67 வது இடத்திலும், பிரேசில் 59.5 புள்ளிகளுடன் 72 வது இடத்தையும் பெற்றுள்ளது.

2031ல் உலகை ஆளப்போகும் 10 நாடுகளில் இந்தியா!

தற்போது அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் குறைந்து வரும் நிலையில் வெளிநாடுகள் உடனான வர்த்தகம் அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவின் டாலர் இருப்பு அதிகளவில் குறைந்து வரும் காரணத்தால் இந்திய ரூபாய் தொடர்ந்து சரியும் என தெரிகிறது.

 

மேலும் பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் இருந்து முதலீடு தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில் இந்திய பொருளாதாரம் பாதிப்படைந்து வருகிறது. இதன் எதிரொலிகள் அனைத்தும் அடுத்த வருடத்தில் ஆய்வறிக்கையில் தெரியும்.

இதேபோல் அமெரிக்கா சீனா பொருட்கள் மீது அதிகளவிலான வரி விதித்துள்ள காரணத்தால் சீனாவின் பொருளாதாரமும் தற்போது அதிகளவில் பாதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here