கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியேற்றுவதில் இந்தியா 4வது இடம்..!

0
300

உலகளவில் கார்பன் டை ஆக்சைட் வெளியேற்றுவதில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்துச் செய்யப்பட்ட ஆய்வில் 2017ஆம் ஆண்டு நிலவரத்தின் படி இந்தியா மொத்த கார்பன் டை ஆக்சைடு உற்பத்தியில் 7 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது.

ஓசோன் மண்டலத்தைப் பாதிக்கும் முக்கியமான வாயுக்களில் ஒன்று கார்பன் டை ஆக்சைடு என்பது குறிப்பிடத்தக்கது.

2017ஆம் ஆண்டில் வெறும் 4 நாட்கள் 58 சதவீதம் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றி உள்ளது, சீனா 27 சதவீதமும், அமெரிக்கா 15 சதவீதமும், ஐரோப்பிய யூனியன் 10 சதவீதமும், இந்தியா 7 சதவீதம் என மொத்தம் 4 நாடுகள் சேர்ந்து 58 சதவீத வாயுவை வெளியேற்றுகிறது.

மீத முள்ள நாடுகள் எஞ்சியுள்ள 41 சதவீத கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியேற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேற்றத்தின் அளவு 2018ஆம் ஆண்டில் 6.3 சதவீதம் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதில் நிலக்கரி வாயிலாக ஏற்படும் co2 வெளியேற்றம் 7.1 சதவீதமும், எண்ணெய் வாயிலாக 2.9 சதவீதமும், எரிவாயு மூலம் 6.0 சதவீதமும் உயரும் என ஆய்வறிக்கை கூறுகிறது.

கார்பன் டை ஆக்சைடு வாயுவை அதிகம் வெளியேற்றும் டாப் 10 நாடுகள் பட்டியலில் சீனா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, ஈரான், சவுதி அரேபியா மற்றும் தென் கொரியா ஆகியவையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here