சாமானிய மக்களுக்குப் பட்ஜெட்டில் இது கிடைக்குமா..?

0
685

பட்ஜெட்.. அடுத்த ஒரு ஆண்டில் ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றப்போகும் ஒரு ஆயுதம் என்றால் மிகையாகாது. சாமானிய மக்களின் வருமானம், வேலைவாய்ப்பு, வர்த்தக வளர்ச்சி, தொழிற்துறை வளர்ச்சி என ஒவ்வொரு விஷயத்தையும் தீர்மானிக்கும் திட்டமிட்டும் ஒரு முக்கியமான கருவியாக விளங்குகிறது இந்தப் பட்ஜெட்.

இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் என்றால் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களும், அதனை அமல்படுத்தியதும் தான். ஆனால் இன்று இந்தப் பட்ஜெட் மக்களின் நம்பிக்கையும், வாக்குகளையும் பெறும் ஒரு கருவியாக மாறியுள்ளது என்பது வருத்தமான செய்தி.

இதை யாராலும் மறுக்கவும் முடியாது.

மோடியின் 5 ஆண்டுக் கால ஆட்சி அடுத்தச் சில மாதங்களில் முடியும் நிலையில், மோடியும், ஆட்சியில் இருக்கும் பிஜேபி தலைமையிலான ஆட்சி மக்களை நேரடியாகத் தேர்தலில் சந்திக்க வேண்டும். இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையை ஒரு இடைக்காலப் பட்ஜெட் ஆக இருக்கப்போகிறது.

பொதுவாக இத்தகைய இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் பெரிய அளவிலான அறிவிப்புகள் எதுவும் இருக்காது. ஆனால் ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள பிஜேபி அதிரடியான அறிவிப்புகளையும், சாமானிய மக்களின் வாக்குகளைப் பெற வேண்டும் எனத் திட்டத்துடன் மக்களைக் கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் எனத் தெரிகிறது.

அப்படிச் சாமானிய மக்களைக் கவரும் வகையில் என்ன அறிவிப்புகளை மோடி அரசு இடைக்காலப் பட்ஜெட் அறிவிக்கப்போகிறது..? வாங்க பார்ப்போம்.

standard deduction-இல் உயர்வு

கடந்த வருடம் மத்திய அரசு standard deduction அறிமுகம் செய்து ஒவ்வொருவருக்கும் மருத்துவ மற்றும் போக்குவரத்துக்காக 40000 ரூபாய் வரையிலான தொகைக்கு வரி விலக்கு அளித்தது.

இந்நிலையில் இந்தத் தொகையை 60000 ரூபாய் வரையில் உயர்த்த அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளாது என நிதி அமைச்சக வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

வரிப் பலகை

தற்போது வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்படும் நிலையில், இந்த அடிப்படை வரி விலக்கு அளவீட்டை 5 லட்சம் வரையில் உயர்த்த வாய்ப்புகள் உள்ளது.

பிஜேபி வட்டாரத்தில் முக்கியத் தலைவரான சுப்பிரமனியன் சாமி 10 லட்சம் வரையில் வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப் பல ஆண்டுகளாகப் பேசி வரும் நிலையில், வாக்குகளைப் பெற வேண்டும் எனத் திட்டமிட்டும் பிஜேபி அரசு அதை நிறைவேற்றும் என அதிகளவில் நம்பப்படுகிறது.

80சி பிரிவு

மாத சம்பளக்காரர்கள் அதிகளவில் வரியை மிச்சப்படுத்துவது 80சி பிரிவின் கீழ் தான். இப்பிரிவில் சுமார் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

இது அளவீடு பல வருடமாக மாற்றம் ஏதுமில்லாமல் நறைமுறையில் இருக்கும் நிலையில் இதை மாற்றுவதன் மூலம் சமானியர்கள் அதிகளவில் பலன் அடைவார்கள் என மத்திய நிதியமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது.

குழந்தைகளின் கல்வி

வலிமையான பொருளாதாரத்தை அமைக்கக் கல்வி ஒரு முக்கியக் கட்டமைப்பு. ஆதலால் நீண்ட கால அடிப்படையில் கல்விக்காக முதலீடு செய்யும் திட்டங்களுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் மத்திய அரசுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இந்தக் கோரிக்கையை மத்திய அரசு முக்கியமானதாக எடுத்துக்கொண்டு முக்கிய முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here