ரமண மகரிஷிதான் உயிர்த்தெழுந்தார்: இயேசு அல்ல – சொன்னவர் இளையராஜா..!

0
772

இசைஞானி இளையராஜா கிறுஸ்துவர்களின் மதக் கடவுளான இயேசுவை பற்றி கருத்து தெரிவித்துள்ளதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தமிழ் திரையுலகில் மிகவும் முக்கியமான இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இவரது இசையில் மாயங்காதவர்களே கிடையது. பல ஆயிரம் படங்களும் மேலாக இசையமைத்துள்ளார். இந்நிலையில் கலைத்துறைச்சார்ந்த சாதனையாளர்களுக்கு தமிழகத்தை சார்ந்த இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு,  குடியரசு தலைவர் பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

விருதுப் பெற்றுக்கொண்டது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய இளையராஜா, “உலகில் தோன்றிய ஞானிகளில் ரமண மகரிஷியைப் போல் எவரும் இல்லை. உலகில் இயேசு உயிர்தெழுந்தார் என்று கூறுவார்கள் ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. உலகிலேயே உயிர்தெழுந்த ஒரே மகான் ரமண மகரிஷி மட்டும் தான். அதுவும் 16 வயதிலே அவர் உயிர்தெழுந்தார்” என்று தெரிவித்தார்.

அவருடைய இந்த கருத்து பெரும் சர்ச்சையானது. இதனால் கிறுஸ்துவ மதத்தின் நம்பிக்கையை புண்படும்படி  பேசியதாக கூறிப்பட்டது.  எனவே சிறுபான்மை மக்கள் நல கட்சியினை சேர்ந்தவர்கள் இளையராஜா அவர்களின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். இதனையடுத்து போலீஸ்காரர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்துள்ளனர். இதனால் தி.நகரில் சிறிது நேரம்  பரபரப்பு  நிலவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here